புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் வெளியீடு!

5 March 2021, 5:27 pm
New Mini Countryman launched In India, receives refreshed styling
Quick Share

பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மினி (Mini) இந்தியாவில் புதிய கன்ட்ரிமேன் எனும் மாடலை வியாழக்கிழமை ரூ.39.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இரண்டு வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது. அவை ஒன்று கண்ட்ரிமேன் கூப்பர் S மற்றும் இரண்டாவது கன்ட்ரிமேன் கூப்பர் S JCW இன்ஸ்பைர்டு என்பவையாகும். இந்த இரண்டாவது மாடல் ரூ.43.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலானது.

ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிகிள் அல்லது SAV என அழைக்கப்படும் இந்த புதிய மினி கன்ட்ரிமேன், நாடு முழுவதும் முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ்களுக்கு கிடைக்கிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் திருத்தப்பட்ட ஸ்டைலிங் அமைப்புகளைப் பெறுகிறது. புதிய ஸ்டைலிங் அம்சங்களில் புதுப்பிக்கப்பட்ட LED ஹெட்லேம்ப்கள் மற்றும் LED டெயில்லைட்டுகள், ஒரு புதிய முன் கிரில் மற்றும் மாறுபட்ட ரூஃப் ஆகியவை அடங்கும். கூப்பர் S17 அங்குல அலாய் வீல்களைப் பெறுகிறது, அதே நேரத்தில் JCW இன்ஸ்பைர்டு வேரியண்ட்டில் ரன்-பிளாட் டயர்களுடன் 18 அங்குல அலாய் கிடைக்கிறது, மேலும் இது கூடுதல் ஏரோடைனமிக் கிட்டையும் பெறுகிறது.

கேபினுக்குள், புதிய மினி கன்ட்ரிமேன் கூப்பர் S கார்பன் பிளாக் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியைப் பெறுகிறது, அதே நேரத்தில் ரேஞ்ச்-டாப்பிங் JCW இன்ஸ்பைர்டு வேரியண்ட்டில் வெள்ளி டிரிம் உடன் பிரீமியம் லெதர் அப்ஹோல்ஸ்டரி உள்ளது. புதிய மினி கன்ட்ரிமேன் 8.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, சுற்றுப்புற விளக்குகள் போன்றவற்றையும் பெறுகிறது.

பவர்டிரெயினுக்கு, இரண்டு வகைகளிலும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கிடைக்கிறது, இது 189 bhp சக்தியையும் 280 Nm உச்ச திருப்புவிசையையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த இயந்திரம் 7-வேக DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. JCW இன்ஸ்பைர்டு வேரியண்டிலும் பேடில் ஷிப்டர்ஸ் உள்ளன.

Views: - 1

0

0