4ஜி இணைப்புடன் நோக்கியா 8000, நோக்கியா 6300 மாடல் போன்கள் விரைவில் வெளியாக வாய்ப்பு!

5 November 2020, 4:45 pm
Nokia 8000, Nokia 6300 With 4G Connectivity Might Arrive Soon
Quick Share

எச்.எம்.டி குளோபல் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வந்த இரண்டு தொலைபேசிகளை மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா 8000 4ஜி மற்றும் நோக்கியா 6300 4ஜி பட்டன் தொலைபேசிகள் டெலியா கேரியரின் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவை இரண்டும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் தற்போது தெரியவில்லை.

பட்டியலின் படி, தொலைபேசிகள் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 ஆகியவை 4ஜி இணைப்புடன், வைஃபை ஆதரவையும் வழங்கும். தொலைபேசிகளைப் பற்றிய வேறு எந்த விவரக்குறிப்புகளையும் இந்த பட்டியல் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், எச்எம்டி குளோபல் இரண்டு மாடல்களிலும் மேம்பட்ட அம்சங்களையும் சிறந்த கேமராவையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இரண்டு மாடல்களும் KaiOS உடன் இயங்குமா அல்லது வேறு ஏதேனும் OS ஐ பயன்படுத்துமா என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த இரண்டு மாடல்களைத் தவிர, நோலியா பட்டியலில் நோக்கியா 8, நோக்கியா 9, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 5.3 மற்றும் பல மாடல்களும் டெலியா பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. நினைவுகூர, நோக்கியா 6300 முதலில் 2006 இல் தொடங்கப்பட்டது. கேமராக்களைப் பொறுத்தவரை, இது 2MP கேமரா மற்றும் S40 OS உடன் வந்தது.

இருப்பினும், இப்போது இரண்டு தொலைபேசிகளும் இப்போது பட்டியலிடப்படவில்லை, எனவே இரண்டு தொலைபேசிகளும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது அல்லது தவறாகவும் பட்டியலிடப்பட்டிருக்கும். எனவே உறுதியான தகவல் வெளியாகும் வரை  காத்திருந்து  தான் ஆக வேண்டும்.

Views: - 33

0

0

1 thought on “4ஜி இணைப்புடன் நோக்கியா 8000, நோக்கியா 6300 மாடல் போன்கள் விரைவில் வெளியாக வாய்ப்பு!

Comments are closed.