ரசிகர்ளை ஏமாற்றிய நோக்கியா…. காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி | நோக்கியா 9.3 ப்யூர்வியூ

27 November 2020, 8:29 pm
Nokia 9.3 PureView 5G delayed until 2021
Quick Share

நோக்கியா 9.3 ப்யூர்வியூ உடன்  நோக்கியா 6.3 மற்றும் 7.3 ஸ்மார்ட்போன்கள்  அடுத்த மாதம் அறிமுகமாகும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்போது ஒரு புதிய அறிக்கையின்படி, நோக்கியா 9.3 ப்யூர்வியூ போனின் அறிமுகம் மேலும் தாமதமாகியுள்ளது.

Nokia anew (nokia_anew) ட்விட்டர் பதிவில் வெளியான தகவலின் படி, நோக்கியா 9.3 ப்யூர் வியூ இந்த ஆண்டு வெளியாகாது, மேலும் இதன் வெளியீடு அடுத்த ஆண்டின் முதல் பாதியில் திட்டமிடப்பட்டுள்ளது. வெளியாகும் மாதம் மற்றும் தேதி இன்னும் உறுதியாக தெரியவில்லை.

நோக்கியா 9 ப்யர்வியூவின் வெளியீடு ஏற்கனவே பல முறை தள்ளிப்போயுள்ளது, இப்போது மீண்டும் தள்ளிப்போனது  நோக்கிய ரசிகர்களை அதிருப்தியில் தள்ளியுள்ளது.

நோக்கியா 9.3 ப்யூர் வியூ போனில் ஸ்னாப்டிராகன் 875 மொபைல் தளம் இடம்பெறும். இருப்பினும், நோக்கியா 9.3 ப்யூர் வியூ ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் இயக்கப்படும் என்று முந்தைய அறிக்கை வெளிப்படுத்தியது.

நோக்கியா 9.3 120 Hz டிஸ்ப்ளே மற்றும் 108 மெகாபிக்சல் பிரதான கேமராவை 8K ரெக்கார்டிங் ஆதரவுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2K தெளிவுத்திறனுடன் ஒரு 6.29-இன்ச் QHD + POLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கக்கூடும்.

நோக்கியா 9.3 ப்யூர் வியூ 64 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் 8K வீடியோ பதிவுக்கு துணைபுரிகிறது என்று கூறப்படுகிறது, ஆனால் வேறு விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இது 4,500 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Views: - 0

0

0

1 thought on “ரசிகர்ளை ஏமாற்றிய நோக்கியா…. காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி | நோக்கியா 9.3 ப்யூர்வியூ

Comments are closed.