ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பில் Nokia C01 Plus ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை & விவரங்கள்

10 June 2021, 11:59 am
Nokia C01 Plus Android 11 Go Edition smartphone announced
Quick Share

எச்எம்டி குளோபல் தனது சமீபத்திய பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போனான நோக்கியா C01 பிளஸ் ஆண்ட்ராய்டு கோ பதிப்பை அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரே ஒரு 1 ஜிபி + 16 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டிற்கு RUB 6,490 (தோராயமாக ரூ.6,600) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா C01 பிளஸ் நீலம் மற்றும் ஊதா வண்ணங்களில் கிடைக்கும் மற்றும் நோக்கியா ரஷ்யா ஆன்லைன் ஸ்டோரில் முன்கூட்டியே ஆர்டர் செய்யவும் கிடைக்கிறது.

நோக்கியா C01 பிளஸ் விவரக்குறிப்புகள்

நோக்கியா C01 பிளஸ் 5.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே 1440 x 720 பிக்சல்கள் திரை ரெசல்யூஷன் மற்றும் 18:9 திரை விகிதத்தைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் UniSoc SC9863A செயலி மூலம் இயக்கப்படுகிறது. தொலைபேசியில் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக நினைவகத்தை 128 ஜிபி வரை மேலும் விரிவாக்க முடியும்.

கேமராவைப் பொறுத்தவரை, நோக்கியா C01 பிளஸ் LED ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் ஏற்றப்பட்டுள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, LED ப்ளாஷ் கொண்ட அதே 5 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. இந்த கைபேசியில் கைரேகை ஸ்கேனர் இல்லை.

நோக்கியா C01 பிளஸ் ஆண்ட்ராய்டு 11 (GO பதிப்பு) இயக்க முறைமையில் இயங்குகிறது. இது 5W சார்ஜிங்கை ஆதரிக்கும் 3000 mAh பேட்டரியைக்  கொண்டுள்ளது. இணைப்பு முன்னணியில், இது 4ஜி VoLTE, வைஃபை 802.11 b/g/n, புளூடூத் 4.2, GPS, GLONASS, டூயல் சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

இந்த தொலைபேசி 148 × 71.8 × 9.3 மிமீ அளவுகளையும் மற்றும் 157 கிராம் எடையையும் கொண்டுள்ளது. 

Views: - 178

0

0