நோக்கியா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் நோக்கியா C3 எப்போது வெளியாகிறது? எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?

21 August 2020, 6:29 pm
Nokia C3 Marketing Poster Suggests Imminent Launch
Quick Share

நோக்கியா விரைவில் இந்தியாவில் நோக்கியா C3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் சாதனத்தின் புதிய மார்க்கெட்டிங் தகவல் இப்போது ஆன்லைனில் கசிந்துள்ளது, இது எச்எம்டி குளோபல் நோக்கியா C3 போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

இந்த நோக்கியா C3 இன் முக்கிய அம்சங்களில் ஆக்டா கோர் செயலி, 3,040 mAh பேட்டரி, பின்புறத்தில் 8 MP கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 MP கேமரா ஆகியவை வீடியோக்கள் மற்றும் செல்ஃபிகள் எடுக்க உள்ளன. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டிருக்கும். இந்த போனில் உள்ள 3040 mAh பேட்டரி ஒரு நாள் முழுக்க பேட்டரி ஆயுளை வழங்குவதை உறுதி செய்கிறது.

நோக்கியா பவர் யூசர் பகிர்ந்த போஸ்டரைப் பார்த்தால், நோக்கியா C3 5.99 இன்ச் HD+ திரையைக் கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 10 உடன் இயங்கும் என்பது தெரிகிறது. மார்க்கெட்டிங் போஸ்டரின் படி, ஸ்மார்ட்போன் ஒரு வருட மாற்று உத்தரவாதத்துடன் வரும். நோக்கியா C3 சீனாவில் இருந்ததைப் போலவே நோர்டிக் ப்ளூ மற்றும் கோல்ட் சாண்ட் வண்ண விருப்பங்களிலும் கிடைக்கக்கூடும்.

இது தவிர, நோக்கியா C3 இன் ஆக்டா கோர் செயலி 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள் சேமிப்புடன் வரும், மைக்ரோ SD கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

நோக்கியா C3 இல் இணைப்பு விருப்பங்களில் வைஃபை 802.11 b / g / n, 4ஜி, புளூடூத் v4.2, ஜிபிஎஸ் / A-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை அடங்கும்.

மார்க்கெட்டிங் போஸ்டர் விலை நிர்ணயம் குறித்த எந்த விவரங்களையும் வெளிப்படுத்தவில்லை, ஆனால் சீனாவில் CNY 699 (தோராயமாக ரூ.7,500) விலையைக் கொண்டுள்ளது.

Views: - 27

0

0