நோக்கியா போன் வாங்கணுமா? ஏப்ரல் 8 வரைக்கும் வெயிட் பண்ணுங்க!

Author: Dhivagar
20 March 2021, 10:42 am
Nokia X20 spotted on Geekbench with Snapdragon 480 SoC, 6GB RAM
Quick Share

ஏப்ரல் 8 ஆம் தேதி எச்எம்டி குளோபல் ஒரு நிகழ்வைத் திட்டமிட்டுள்ளது. அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், சில  தகவல் கசிவுகள் சில விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்மூலம் நிறுவனம் நோக்கியா X20 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இப்போது அறிமுகத்திற்கு முன்னதாக, நோக்கியா X20 ஜீக்பெஞ்ச் தரப்படுத்தல் தளத்தில் காணப்பட்டுள்ளது, இது முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது.

ஜீக்பெஞ்ச் பட்டியலின் படி, நோக்கியா X20 1.8GHz ஸ்னாப்டிராகன் 480 உடன் இயக்கப்படும், இது பட்டியலில் SM4350 என்ற மாடல் எண்ணுடன் உள்ளது. சிப்செட் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும். இருப்பினும், சாதனம் மற்ற வகைகளிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மென்பொருளைப் பொறுத்தவரை, தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 OS உடன் இயங்குகிறது. ஜீக்பெஞ்சின் சிங்கிள் கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில், நோக்கியா G10 முறையே 507 மற்றும் 1661 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், X20 தவிர, எச்எம்டி குளோபல் நோக்கியா G10 மற்றும் நோக்கியா X20 பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி  இரவு 8:30 மணிக்கு (மாலை 3 மணி GMT) இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

வெளியான ஒரு தகவல் கசிவின் படி, நோக்கியா X20 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுக்கு யூரோ 349 (தோராயமாக  ரூ.30,200) விலை நிர்ணயம் செய்துள்ளது. மறுபுறம், நோக்கியா X10 விலை யூரோ 300 (தோராயமாக ரூ. 26,100) இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் நோக்கியா G10 ஜீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க்கிங் தளத்திலும் காணப்பட்டது, அதன் படி ஸ்மார்ட்போன் 2.0 GHz மீடியா டெக் ஹீலியோ P22 மற்றும் 3 ஜிபி ரேம் உடன் இயங்கும் என்பது தெரியவந்துள்ளது. தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 OS உடன் இயங்கும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா G10 மிகப்பெரிய 6.4 அங்குல HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு ஆக்டா கோர் சிப்செட் உடன் இயக்கப்படும், இது 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பகத்துடன் மைக்ரோ SD வழியாக விரிவாக்க விருப்பத்துடன் கிடைக்கும். இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும். 4,000 mAh பேட்டரியை 10W ஃபாஸ்ட் சார்ஜிங் செய்வதற்கான ஆதரவுடன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

48 மெகாபிக்சல் பிரதான சென்சார், 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ராவைடு மற்றும் 2 MP மேக்ரோ ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குவாட் கேமரா அமைப்பை G10 கொண்டிருக்கும். முன்பக்கத்தில், செல்ஃபிக்களுக்காக 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும், பின்புறத்தில் LED ஃபிளாஷ் இருக்கும்.

Views: - 182

0

0