சுமார் 6 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் ஒன்னுமாகாத முரட்டுத்தனமான கட்டமைப்பில் Nokia XR20 அறிமுகம் | விலை & விவரங்கள்

Author: Dhivagar
27 July 2021, 1:24 pm
Nokia XR20, with IP68-rated rugged built and 5G support, launched
Quick Share

எச்எம்டி குளோபல் தனது சமீபத்திய முரட்டுத்தனமான கட்டமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா XR20 போனை 550 டாலர் (தோராயமாக ரூ. 41,000) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கைபேசியில் MIL-STD810H- சான்றளிக்கப்பட்ட கேசிங் உள்ளது, இது 1.8 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் போனைப் பாதுகாப்பாக தாங்கிக்கொள்ளும். இது IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது.

சமீபத்திய கொரில்லா கிளாஸ் விக்டஸ் உடன் பாதுகாக்கப்பட்ட இந்த டிஸ்பிளே ஈரமான விரல்களுடன் அல்லது கையுறைகளுடனும் கூட சிறப்பாக வேலைச் செய்யக்கூடியது.

நோக்கியா XR20 ஒரு பஞ்ச்-ஹோல் வடிவமைப்பையும் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது ஒரு சதுர வடிவ இரட்டை கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது.

இந்த சாதனம் 6.67 இன்ச் ஃபுல்-HD+ (1080×2400 பிக்சல்கள்) IPS LCD டிஸ்பிளேவில் 550-நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

எந்தவொரு பயன்பாட்டிற்கும் / செயல்பாட்டிற்கும் மேப்பிங் செய்யக்கூடிய தனிப்பயன் பொத்தானையும் இது மேலே கொண்டுள்ளது.

நோக்கியா XR20 இரட்டை பின்புற கேமரா ஏற்பாட்டைக் கொண்டுள்ளது, இது 48 MP (f/1.8) முதன்மை சென்சார் மற்றும் 13 MP (f/2.4) அல்ட்ரா-வைட் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, இது 8MP (f/2.0) முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.

நோக்கியா XR20 ஒரு ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11 உடன் பூட்அப் ஆகிறது மற்றும் 18W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,630 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

கைபேசியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி ஆதரவு ஆகியவை உள்ளது.

அமெரிக்காவில், நோக்கியா XR20 போனின் ஒரே ஒரு 6 ஜிபி / 128 ஜிபி மாடலுக்கு $550 (தோராயமாக ரூ.41,000) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24 முதல் இது வாங்க கிடைக்கும். இருப்பினும், இந்தியாவில் அதன் கிடைக்கும் தன்மை குறித்து எந்த தகவலும் இல்லை.

Views: - 241

0

0