2020 ஆண்டில் பயன்படுத்தப்பட்ட மொக்கையான பாஸ்வேர்டுகளின் பட்டியல் வெளியானது
20 November 2020, 9:31 amபாஸ்வேர்டு மேலாண்மை சேவையான நோர்ட்பாஸ் (NordPass) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, 2020 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொக்கையான பாதுகாப்பற்ற 200 பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த டாப் 20 பட்டியலில்:
- 123456
- 123456789
- picture1
- Password
- 12345678
- 111111
- 123123
- 12345
- 1234567890
- Senha
- 1234567
- qwerty
- Abc123
- Million2
- 000000
- 1234
- Iloveyou
- Aaron431
- Password1
- Qqww1122
போன்ற பாஸ்வேர்டுகள் உள்ளன.
இது போன்ற பாஸ்வேர்டுகள் யூகிக்க எளிதானவை, அவை ஹேக்கர்களுக்கு எளிதான இலக்குகளாக அமைகின்றன. இதனால், உங்கள் தகவல்கள் மிகவும் பாதுகாப்பற்றதாகிறது.
இவற்றில், “123456” என்ற பாஸ்வேர்டு மிகவும் யூகிக்கக்கூடியது, மேலும் இது 2015 ஆம் ஆண்டிலும் பாதுகாப்பற்ற பாஸ்வேர்டுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. நோர்ட்பாஸ் அறிக்கையின்படி, “123456” பாஸ்வேர்டு 23 மில்லியனுக்கும் அதிகமான முறை அதாவது சுமார் 2 கோடி முறைக்கும் மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது, இரண்டாவது மிகவும் பாதிக்கப்படக்கூடிய பாஸ்வேர்டு “123456789”, அதைத் தொடர்ந்து “picture1” மற்றும் “password” போன்றவை எல்லாம் மிகவும் பாதுகாப்பற்றதாக உள்ளன.
இந்த டாப் 20 பாஸ்வேர்டுகளில் பெரும்பாலானவற்றை ஹேக்கர்களால் ஒரு நொடிக்குள் கண்டுபிடித்துவிட முடியும் என்று என்று நோர்ட்பாஸ் தெரிவித்துள்ளது.
பாஸ்வேர்டுகளாகப் பயன்படுத்தப்படும் பெயர்களின் பட்டியலில், “aaron431” என்ற பாஸ்வேர்டு 90,000 பகிர்வுகளுடன் முதலிடத்தில் உள்ளது; கடந்த ஆண்டு Ashley என்ற பாஸ்வேர்டு டாப் 20 பட்டியல் இருந்தது. உணவு வகைகளில் “Chocolate” என்பது 21,000 க்கும் மேற்பட்ட பயனர்களால் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படும் பொதுவான பாஸ்வேர்டாக இருந்தது. சுவாரஸ்யமாக, இந்த டாப் பட்டியலில் “Pokemon” பாஸ்வேர்டை 37,000 பேர் பயன்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, பாஸ்வேர்டு என்பதே யாருக்கும் தெரியாத வகையிலும் யாரும் எளிதில் கண்டுபிடுத்துவிடாமல் இருக்கும் வகையிலும் தான் இருக்க வேண்டும். மேற்கூறியது போன்ற பாஸ்வேர்டுகளை வைப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்கள் பாஸ்வேர்டுகளுக்கு உத்தரவாதம் ஏதும் இல்லை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். எனவே யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் பாஸ்வேர்டுகளை வைத்து உங்கள் தகவலை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
0
0
1 thought on “2020 ஆண்டில் பயன்படுத்தப்பட்ட மொக்கையான பாஸ்வேர்டுகளின் பட்டியல் வெளியானது”
Comments are closed.