Nothing Ear 1 TWS இயர்பட்ஸ் குறித்து தரமான அப்டேட் வெளியாகிருக்கு! ஆப்பிள், சாம்சங்குக்கு சங்கு தான்!

12 July 2021, 3:35 pm
Nothing Ear 1 Earbuds India Price Confirmed Ahead Of Launch
Quick Share

முன்னாள் ஒன்பிளஸ் இணை நிறுவனர் கார்ல் பெய் அவர்களால் லண்டனை தளமாகக் கொண்டு நிறுவப்பட்ட நத்திங் நிறுவனம், அதன் முதல் தயாரிப்பான நத்திங் இயர் 1 TWS இயர்பட்ஸின் விலையை உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சந்தோசமான செய்தி என்னவென்றால் இந்த வயர்லெஸ் இயர்பட்ஸின் விலை மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் மலிவாக இருக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சந்தைகளில் நத்திங் இயர் 1 இயர்பட்ஸின் விலை $99, €99 அல்லது £99 ஆக இருக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இந்தியாவில் இயர்பட்ஸின் விலை சொல்லாமல் இருந்த நிலையில் பிளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த இயர்பட்ஸின் விலை ரூ.5999 என்று உறுபடுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் சந்தோசமான தகவல் என்னவென்றால், ஆப்பிள், சாம்சங் மற்றும் பிற பிரீமியம் பிராண்டுகளின் இயர்பட்ஸை விட இது மிகவும் மலிவானதாக என்பது தான்.

Nothing Ear 1 இயர்பட்ஸ் பற்றிய தகவல்கள்

நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் ஒரு வெளிப்படையான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் பிரபலமான ஸ்வீடிஷ் ஆடியோ பிராண்டான டீனேஜ் இன்ஜினியரிங் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இது செயலில் சத்தம் ரத்துசெய்யும் ANC அம்சத்துடன் மூன்று உயர் வரையறை மைக்குகளை கொண்டிருக்கும். அவை சுற்றுப்புற சத்தத்தை ரத்து செய்யும். மேலும், உயர்நிலை அம்சங்களுடன் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வெளியீடு ஜூலை 27 அன்று நிகழும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும்.

Views: - 212

0

0