அந்த 100 அதிர்ஷ்டசாலிகள் யார்யாரோ தெரியல! நத்திங் நிறுவனம் வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ் | Nothing Ear 1 DropX

15 July 2021, 12:58 pm
Nothing Ear 1 to go on sale on July 19 for only 100 customers
Quick Share

Nothing நிறுவனம் முதல் சாதனமான Ear 1 இன் முதல் 100 யூனிட்களை பிரத்தியேகமாக விற்பனை செய்ய ஸ்டாக்எக்ஸ் (StockX) உடன் கூட்டு சேருவதாக அறிவித்துள்ளது. டிராப்எக்ஸ் (DropX) எனப்படும் ஸ்டாக்எக்ஸின் நேரடி-நுகர்வோர் தயாரிப்பு வெளியீட்டு முறையைப் பயன்படுத்தும் முதல் பிராண்ட் இதுவாகும்.

நத்திங் இயர் 1 டிராப்எக்ஸ்

நத்திங் இயர் (1) 19 ஜூலை 2021 அன்று மாலை 6:30 மணிக்கு டிராப்எக்ஸ் நேரலையில் வாங்க கிடைக்கும். நத்திங் தயாரிப்புகள் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். சுவாரஸ்யமாக, ஸ்டாக்எக்ஸ் இந்தியாவிற்கும் பொருட்களை விநியோகம் செய்யும். நத்திங் இயர்பட்ஸ் வேண்டும் என்றால் இந்திய வாடிக்கையாளர்களும் நேரடியாக இதை வாங்கலாம்.

நத்திங் இயர் (1) டிராப்எக்ஸ் ஜூலை 21 அன்று மாலை 6:30 மணி வரை வரை இயங்கும். ஒவ்வொரு வரையறுக்கப்பட்ட பதிப்பு இயர் (1) யூனிட்டும் 1-100 எண்களுடன் வழங்கப்படும்.

கார்ல் பெய் அவர்களின் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் முதல் தயாரிப்பு நத்திங் இயர் (1) தான். TWS இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி உலகளாவிய அறிமுகத்துடன் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும். இந்தியாவில் இதன் விலை ரூ.5,999 ஆக இருக்கும். இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும்.

Views: - 180

0

0