வெளியாகும் முன்னரே Nothing Ear 1 TWS இயர்பட்ஸின் விலை எவ்வளவென்று இங்க தெரிஞ்சிக்கோங்க

7 July 2021, 5:04 pm
Nothing Ear 1 TWS earbuds price revealed
Quick Share

தொழில்நுட்ப பிரிவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது Nothing நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் Nothing Ear 1 TWS இயர்பட்ஸ் தான். இந்த தயாரிப்பு குறித்து சில அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்போது இதன் விலைக் குறைத்த தகவல் கசிந்துள்ளது.

Nothing Ear 1 TWS இயர்பட்ஸ் விலை €99 அதாவது இந்திய மதப்பில் தோராயமாக ரூ.8,700 என்று டெக் க்ரஞ்சிற்கு அளித்த பேட்டியில் நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார். அவற்றின் விலை அமெரிக்காவில் $99 (தோராயமாக ரூ.7,400) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்தியாவிலும் சுமார் ரூ.7000 முதல் ரூ.8000 க்குள் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நிறுவனம் தனது தயாரிப்புகளை ஆன்லைனில் விற்க விற்பனை தணல்களிடம் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கார்ல் பெய் தெரிவித்துள்ளார். நத்திங் இயர் 1 விலை மலிவு விலையிலானதாக இல்லை என்றாலும் அதிகம் விளைக்கொண்டதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். 

நத்திங் ஐயர் 1 காதணிகளில் செயலில் சத்தம் ரத்துசெய்தல் (ANC) அம்சம் இடம்பெறும், இந்த தகவலையும் நத்திங் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். 

நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் வெளியீடு ஜூலை 27 மாலை 6:30 மணிக்கு நிகழும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் நத்திங் நிறுவனம் தனது தயாரிப்புகளை ஆன்லைன் சேனல்கள் மூலம் விற்க இந்தியாவில் பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. 

Views: - 112

0

0