ஓலா மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவக்கம்!

15 July 2021, 5:41 pm
OLA ELECTRIC SCOOTER BOOKINGS OPEN
Quick Share

வெறும் ரூ.499 விலையில் ஓலா மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகளை துவங்குவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓலா நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை ‘S’ தொடரில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக S, S1, S1 PRO ஆகிய பெயர்களை பதிவுச் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை ஆவணம் மூலம் பெயர்கள் கசிந்துள்ளன. கசிந்த ஆவணங்களிலிருந்து, ஓலா தனது மின்சார ஸ்கூட்டருக்கு ‘Series S’ என்று பெயரிடலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், ஸ்கூட்டரை: S1 S1 புரோ ஆகிய இரண்டு வகைகளில் வழங்கக்கூடும்.

S1 குறைந்த திறன் கொண்ட பேட்டரி பேக் மற்றும் மோட்டார் விவரக்குறிப்புகள் கொண்ட குறைந்த விலையிலான மாறுபாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓலா பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளுக்கு ஆபரேட்டர்களுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டராக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

மறுபுறம், S1 புரோ அனைத்து வகையான நவீன ப்ரீமியம் அம்சங்களுடன்  வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. S1 ப்ரோவில் வழங்கப்படும் மின்சார பவர் ட்ரெய்ன் அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் பயண வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிப்புற வடிவமைப்பு

ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு இரண்டு மாடலுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு முழு அளவிலான ஹெல்மெட்டுக்கு இடமளிக்கக்கூடிய மிகப்பெரிய சீட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற வெளிப்புற அம்சங்கள்:

  • இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்கள்
  • கிடைமட்டமாக பொருத்தப்பட்ட LED டெயில் லைட்டுகள் 
  • திடமான இருக்கைகள்
  • முன் கவசம்
  • அலாய் சக்கரங்கள் 

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் இணைப்பு அம்சம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் ஒரு பெரிய TFT தொடுதிரை டிஸ்பிளேவுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது eSIM சேவையுடன் இணைய இணைப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

இது நிறுவனம் வழங்கும் ஸ்மார்ட்போன் ஆப் மூலம் ஸ்கூட்டரை இணைக்க உதவும். மொபைல் பயன்பாட்டின் மூலம், பயனர்கள் ஸ்கூட்டரின் இயக்கத்தை கண்காணிக்கலாம், அருகிலுள்ள சார்ஜிங் நிலையங்களைக் கண்டறியலாம் மற்றும் பல சேவைகளைப் பெறலாம்.

இருப்பினும், லோயர்-ஸ்பெக் S1 மாறுபாட்டில் இணைப்பு மற்றும் பல அம்சங்களை இல்லாமல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Views: - 237

1

0

Leave a Reply