வீடு வீடாக சென்று டெலிவரி | யாருமே கையிலெடுக்காத முயற்சியை கையிலெடுக்கும் ஓலா எலக்ட்ரிக்! | Ola Electric Scooter

22 July 2021, 1:06 pm
Ola to Home Deliver Upcoming Electric Scooter to Customers in India
Quick Share

இந்தியாவில் ஓலா தனது வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வெறும் 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று குறைந்த நேரத்தில் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. அதையடுத்து இப்போது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் விநியோகம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிடட்டுள்ளது. 

அது என்னவென்றால் ஓலா நிறுவனம் இந்தியா முழுவதும் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று தயாரிப்புகளை விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி செய்யும்போது நிறுவனத்திடம் இருந்தே நேரடியே ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பதால், இடைநிலை டீலர்ஷிப்களின் தேவையும் அதற்காகும் செலவும் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

ரூ.499 செலுத்துவதன் மூலம் ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்திருந்தால், ஓலா டெலிவரிகளை கொடுக்க தொடங்கும்போது அதைப் பெறுவதில் நீங்கள் முதன்மை வாடிக்கையாளராக இருப்பீர்கள்.

அதே போல உங்களுக்கு ஸ்கூட்டர் வேண்டாம் என்றால் எந்த நேரத்திலும் பணத்தைத் திரும்பப் பெறலாம். உங்கள் தொலைபேசி எண் மற்றும் OTP சரிபார்ப்புடன் http://olaelectric.com தளத்தில் Login செய்ய வேண்டும். உள்நுழைந்த பிறகு, நெட் பேங்கிங், கிரெடிட் / டெபிட் கார்டுகள், யுபிஐ, இ-வாலெட்டுகள் அல்லது ஓலாமனி ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் ஓலா ஸ்கூட்டரை ரூ.499 க்கு முன்பதிவு செய்யலாம். நீங்கள் விரும்பினால், ஏராளமான ஸ்கூட்டர்களையும் முன்பதிவு செய்யலாம்.

எதிர்காலத்தில் உங்கள் ஆர்டரை ரத்துசெய்யவோ மாற்றவோ முடியும். முன்பதிவு கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட 7-10 வணிக நாட்களுக்குள், உங்கள் அசல் கட்டண முறைக்கு பணம் திருப்பி அனுப்பப்படும். ஓலா ஸ்கூட்டரை வேறொருவரின் பெயருக்கும் மாற்றலாம். கோரிக்கை வைக்க, [email protected] என்ற அஞ்சல் முகவரியில் ஓலாவைத் தொடர்பு கொள்ளலாம். ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய எந்த ஆவணமும் தேவையில்லை. 

Views: - 177

0

0

Leave a Reply