தள்ளுபடி விலையில் கிடைக்கிறது ஒன்பிளஸ் 8 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்! எங்கு இந்த தள்ளுபடி? உங்களுக்கு தெரியுமா?

14 September 2020, 10:38 am
OnePlus 8 5G Series Available With Massive Discount
Quick Share

ஒன்பிளஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் சமீபத்திய ஒன்பிளஸ் 8 தொடரை அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமில்லாது, நிறுவனம் ஏற்கனவே அதன் அடுத்த பதிப்பான ஒன்பிளஸ் 8T தொடரிலும் வேலைச் செய்யத் துவங்கிவிட்டது. 

இந்த ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி மாடல்களில் ஏதேனும் ஒன்றை வாங்க நீங்கள் யோசித்தால், நீங்கள் போனை வாங்குவதற்கு இது சரியான நேரம். ஏனெனில் இப்போது ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பாரிய தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. அது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

ஒன்பிளஸ் 8 5ஜி தொடரில் கிடைக்கும் தள்ளுபடிகள்

இந்த ஒன்பிளஸ் 8 5 ஜி மற்றும் ஒன்பிளஸ் 8 புரோ 5 ஜி ஸ்மார்ட்போன்களில் வாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட கால தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. ஆன்லைனில் வாங்கும்போது ரூ. 3,000 தள்ளுபடி கிடைக்கும். 6 ஜிபி / 128 ஜிபி உள்ளமைவுடன் கூடிய தரமான ஒன்பிளஸ் 8 5ஜி வேரியண்ட்டை ரூ. 41,999 விலைக்குப் பதிலாக ரூ.38,999 விலையில் வாங்க முடியும்.

விலை குறைப்பு அடிப்படை மாதிரியில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. 8 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 8 இன் மிட்-டயர் மாடல் ரூ.44,999 விலையிலேயே விற்பனை செய்யப்படும். இன்டர்ஸ்டெல்லர் க்ளோ, கிளேசியல் கிரீன் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகிய வண்ணங்களிலிருந்து உங்களுக்குப் பிடித்த ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

ஒன்பிளஸ் 8 ப்ரோவுக்கு வருகையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளமைவு கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.54,999 விலையில் விற்பனை செய்யப்படும். இப்போது, ​​இந்த மாடல் ரூ.3,000 விலைக்குறைப்பைப் பெற்று ரூ.51,999 விற்பனை செய்யப்படும். 12 ஜிபி ரேம் கொண்ட டாப் எண்ட் மாடல் ரூ.59,999 க்கு பதிலாக ரூ.56,999 விலையில் விற்பனைச் செய்யப்டுகிறது.

முன்னர் குறிப்பிட்டபடி, இது அமேசானில் வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட கால சலுகை ஆகும். ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும். இந்த விற்பனை ஏற்கனவே செப்டம்பர் 10 முதல் நேரலையில் உள்ளது மற்றும் இந்தியாவில் அக்டோபர் 9 வரை செல்லுபடியாகும்.

Views: - 12

0

0