5 நாளில் வெடித்துச் சிதறியது ஒன்பிளஸ் நோர்ட் 2 | பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பயனர் | ஒன்பிளஸ் நிறுவனத்தின் பதிலென்ன? | Oneplus Nord 2 Exploded explained

Author: Dhivagar
2 August 2021, 6:03 pm
OnePlus Nord 2 Reportedly Explodes, User Suffers Trauma; Company Investigating The Issue
Quick Share

சமீபத்தில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனை வாங்கிய பயனர் ஒருவர், அந்த போன் வெடித்துச் சிதறியாக தெரிவித்து அதன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தத் தகவலை பெங்களூருவைச் சேர்ந்த அன்கூர் சர்மா என்பவர் தான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், தனது மனைவி ஐந்து நாட்களுக்கு முன்பு தான் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனை வாங்கியதாகவும், சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது திடீரெனெ இந்த போன் வெடித்துச் சிதறியதாகவும் ட்வீட் செய்துள்ளார். அதோடு வெடித்துச் சிதறி கருகி போன போனின் புகைப்படங்களையும் ஷர்மா பகிர்ந்து கொண்டார். ஆனால், சற்று நேரத்தில் அவரே அந்த புகைப்படங்களை நீக்கிவிட்டார். இந்த சம்பவத்தினால் சைக்கிள் ஓட்டும்போது தனது மனைவி விபத்தில் சிக்கியதாகவும், சம்பவத்திற்குப் பிறகு பெரும் அதிர்ச்சிக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

OnePlus Nord 2 Reportedly Explodes, User Suffers Trauma; Company Investigating The Issue

அவர் பகிர்ந்த படங்களின் படி, டிஸ்பிளே பின் பேனல் மற்றும் ஃபிரேம் அனைத்தும் எரிந்து சிதைந்து ஒன்பிளஸ் நோர்ட் 2 போன் முற்றிலுமே சேதமடைந்திருப்பதை காண முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் பதிலளித்தும் உள்ளது. நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக அளித்த பதிலில், “இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் தீவிரமாக கவனிப்போம். எங்கள் குழு ஏற்கனவே பயனரை அணுகியுள்ளது, மேலும் இது குறித்து விசாரித்தும் வருகிறோம்” என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் இந்த விபத்து குறித்து மக்களுக்கு பதிலளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இது நோர்ட் சீரிஸின் கீழ் வெளியான மூன்றாவது ஸ்மார்ட்போன் மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 1200-AI சிப்செட், 6.43 இன்ச் டிஸ்ப்ளே, 12 ஜிபி RAM, 50 MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் போன்ற பல அம்சங்களோடு வருகிறது.

OnePlus Nord 2 Reportedly Explodes, User Suffers Trauma; Company Investigating The Issue

இருப்பினும் வாங்கிய 5 நாட்களில் போன் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்பிளஸ் பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 459

1

0