ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி அறிமுகத்தை முன்னிட்டு நார்டு மாடல் நிறுத்தம் | RIP Oneplus Nord

22 July 2021, 3:28 pm
OnePlus Nord discontinued ahead of Nord 2 5G launch today
Quick Share

ஒன்பிளஸ் நிறுவனம் இன்று இந்தியாவில் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இப்போது இந்த புதிய போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ்  நார்டு ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BGR India தளத்தில் வெளியான ஒரு புதிய அறிக்கையின்படி வியாழக்கிழமை காலை முதல் இந்தியாவில் ஒரிஜினல் நார்டு ஸ்மார்ட்போன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஸ் நீடித்த வரை இந்த மிட்-ரேஞ்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்பொது ஸ்டாக்ஸ் தீர்த்ததை அடுத்து இனி இது விற்பனைக்கு கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்தியா இணையதளத்தில் ஒரிஜினல் நார்டு ஸ்மார்ட்போன் Out of stock என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசான் இந்தியாவிலும் இது அகற்றப்பட்டது. ஆஃப்லைன் கடைகளிலும் இனி வாங்குவதற்கு கிடைக்காது என்று அறிக்கையின் மூலம் தெரிகிறது.

ஒன்பிளஸ் நார்டு 6 ஜிபி RAM + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுக்கு ரூ.24,999 விலையும், 8 ஜிபி RAM + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுக்கு ரூ .27,999 விலையும், 12 ஜிபி RAM + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுக்கு ரூ .29,999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஒன்பிளஸ் நார்டு விவரக்குறிப்புகள்

ஒன்ப்ளஸ் நார்டில் 6.44 அங்குல முழு HD+ லிக்குயிட் AMOLED டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷனுடன் இருந்தது. தொலைபேசி 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதத்துடன் வருகிறது. அட்ரினோ 620 GPU உடன் இந்த தொலைபேசி சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 5ஜி செயலி உடன் இயக்கப்படுகிறது.

இது அதிகபட்சமாக 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஒன்ப்ளஸ் நோர்டில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றுடன் 48 மெகாபிக்சல் OIS சோனி IMX 586 சென்சார் உள்ளது.

முன்பக்கத்தைப் பொறுத்தவரை, 32 மெகாபிக்சல் செல்பி மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 105 டிகிரி FoV உடன் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்டில் 4000 mAh பேட்டரி இருக்கும், மேலும் இது வார்ப் சார்ஜ் 30T 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும். இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இது வைஃபை, புளூடூத் 5.1, GPS, GLONASS, NavIC, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Views: - 149

0

0

Leave a Reply