உங்ககிட்ட ஸ்மார்ட்வாட்ச் இருக்கலாம்… ஆனா அதுல 4GB ஸ்டோரேஜ் இருக்கா? இதை படிங்க

8 July 2021, 9:32 am
OnePlus Watch Cobalt Limited Edition launched in India
Quick Share

ஒன்பிளஸ் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. அதோடு ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் பதிப்பையும் அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் கோபால்ட் பதிப்பை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் பதிப்பு விலை, விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் பதிப்பு விலை | OnePlus Watch Cobalt Limited Edition

இந்தியாவில், புதிய ஒன்பிளஸ் சிறப்பு பதிப்பு ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.19,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த கடிகாரம் ஜூலை 16 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இது oneplus.in, ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் வழியாக மதியம் 12 மணிக்கு கிடைக்கும். நீங்கள் இந்த வாட்சை வாங்க ஆர்வமாக இருந்தால் ஜூலை 7-10 வரை oneplus.in மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்பில் ஸ்மார்ட்வாட்சை ரூ.1000 க்கு முன்பதிவு செய்யலாம்.

கடிகாரத்தை முன்பதிவு செய்பவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மூலம் கடிகாரம் கிடைப்பது குறித்த அறிவிப்பு கிடைக்கும். அதன்பிறகு 2021 ஜூலை 12 முதல் 15 க்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.

எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும்போது இந்த கடிகாரம் ரூ.1000 உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இது செப்டம்பர் 15 வரை செல்லுபடியாகும். கூடுதலாக, பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் 5% கேஷ்பேக்கையும் பெறலாம்.

ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் பதிப்பு விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, ஸ்மார்ட்வாட்சில் 1.39 அங்குல AMOLED டிஸ்ப்ளே 454 × 454 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 326 ppi பிக்சல் அடர்த்தி உள்ளது. கூடுதலாக, கோபால்ட் பதிப்பு சிறப்பான சபையர் கிளாஸ் உடன் வருகிறது. மேம்பட்ட பிரகாசம் மற்றும் கீறல் எதிர்ப்புக்கு 9 மோஹ்ஸ் மதிப்பீடும் உள்ளது.

ஒன்பிளஸ் வாட்சில் SpO2 கண்காணிப்பு, மன அழுத்தத்தைக் கண்டறிதல், சுவாசம், விரைவான இதயத் துடிப்பு எச்சரிக்கைகள் மற்றும் ஓய்வு எடுப்பதற்கான நினைவூட்டல்கள் உள்ளன. ஸ்மார்ட்வாட்சில் 402 mAh பேட்டரி உள்ளது, இது வார்ப் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த அணியக்கூடிய சாதனம் 20 நிமிட சார்ஜிங் உடன் ஒரு வார பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

இந்த வாட்ச் மூலம் ஒன்பிளஸ் டிவியைக் கட்டுப்படுத்தும் திறன் இதில் உள்ளது. இதன் மூலம், நீங்கள் ஒலி அளவைக் கட்டுப்படுத்தலாம் அல்லது தொலைக்காட்சியை இயக்கலாம் / அணைக்கலாம். வாட்ச் 4 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும், ஸ்மார்ட்வாட்ச் IP 68 மற்றும் 5 ATM தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

Views: - 146

0

0