ஆன்லைன் ஷாப்பிங் வரமா அல்லது சாபமா? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

1 October 2020, 9:47 am
Online shopping nectar or poison it is very important for you to know
Quick Share

ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொறுத்தவரை வாடிக்கையாளர் எங்கும் செல்லத் தேவையில்லை, வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கே பொருள் வந்து சேரும். அதுவும் இந்த கொரோனா சமயத்தில் சமையல் பொருட்கள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை அனைத்தையும் வாங்க மக்கள் இந்த வசதியைத்தான்  அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவு பேர் பயன்படுத்துவதால் இந்த ஆன்லைன் ஷாப்பிங் முறையில் நன்மைகள் மட்டுந்தான் இருக்கிறது என்பதில்லை. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போலவே, ஆன்லைன் ஷாப்பிங் முறையிலும் நன்மைகளும் சில குறைபாடுகளும் உண்டு. அப்படி என்னென்ன நன்மைகள் குறைபாடுகள் உள்ளது என்பதை தான்  இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஆன்லைன் ஷாப்பிங் – நன்மைகள் 

 • சரி, முதலில் இதனால் என்னென்ன நன்மைகள் உள்ளதென்று பார்க்கலாம்.
 • ஆன்லைன் ஷாப்பிங்கின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் வசதியானது,
 • ஏனென்றால் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தொலைபேசியில் ஆர்டர் செய்வதுதான். ஆர்டர் செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். பெரும்பாலும் சொன்ன நாளிலோ அதற்கு முன்னதாகவோ நீங்கள் ஆர்டர் செய்த பொருள்  கண்டிப்பாக வந்துவிடும். 
 • மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் பொருட்களை தள்ளுபடி விலையில் பெற முடியும். நிறுவனங்கள், வங்கிகள் வழங்கும் ஆபர்கள், தள்ளுபடிகள், EMI, வட்டி இல்லாத EMI, கடன் வசதி, கேஸ்பேக் போன்றவற்றை எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே பெற முடியும். கடைகளில் பேரம் பேசுவது போல் பேரம் பேச தேவையில்லை.
 • அதுவும் முக்கியமான பண்டிகைகளின் போது Amazon Great Indian Festival, Flipkart Big Billion Days போன்ற நாட்களில் அற்புதமான பல சலுகைகள் கிடைக்கும், இது வாடிக்கையாளருக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயம்.
 • அதேபோல் ஆன்லைனில் நீங்கள் பலவகையான பிராண்டுகளின் தயாரிப்புகளைப் பார்க்க முடியும். உங்களுக்கு பயனுள்ளதைத் தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதாகிறது. பல கடைகளை ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. கடைகளில் கிடைக்காத பல பொருட்களும் ஆன்லைனில் கிடைக்கும்.

ஆன்லைன் ஷாப்பிங் – குறைபாடுகள்

 • இப்போது இதில் இருக்கும் சில குறைபாடுகளைப் பற்றி பார்க்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் நன்மைகள் இருப்பது போல, அத்துடன் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி என்ன குறைபாடுகள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
 • ஒரு தயாரிப்பின் தரத்தை ஆன்லைனில் வெறும் புகைப்படத்தை மட்டும் வைத்து நம்மால் தெரிந்துக்கொள்ள முடியாது. எனவே சில நேரங்களில் ஒரு தரமில்லாத பொருட்களுக்கு  அதிகம் பணம் செலுத்த நேர்ந்து விடுகிறது.
 • இதன் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், வலைத்தளம் வழியாக தான் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்ளப்படுகிறது. அதிக இணைய பயன்பாடு காரணமாக பல போலி வலைத்தளங்களும் இணையத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இது பொருட்களின் விலையை மிகவும் குறைவாக காண்பித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. இதனால் பலரும் ஏமாந்து விடுகின்றனர்.
 • எனவே நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, நன்கு அறியப்பட்ட பதிவுசெய்யப்பட்ட வலைத்தளத்திலிருந்தே பொருட்களை  வாங்குங்கள்,
 • சில முறை நீங்கள் எதிர்பார்க்கும் கால அளவை விட  பொருட்கள் மிகவும் தாமதமாக வரக்கூடும்.
 • எனவே, Flipkart, Amazon, Myntra போன்ற இருக்கும் பல நன்கு அறியப்பட்ட இ-காமர்ஸ் தளங்களிலும், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் வலைத்தளங்களிலும் நீங்கள் பொருட்களை வாங்கினால் பொருட்கள் ஓரளவு தரமாகவும், உங்கள் பணம் பறிபோகாமலும்  இருக்கும்.


முடிவுரை


எனவே, நன்கு அறிந்து  செயல்பட்டால் ஆன்லைன் ஷாப்பிங் முறை கண்டிப்பாக ஒரு வரம் தான். விவரம் தெரியாமல் இருந்தால், சாபமாகவும் மாறக்கூடும். 

Views: - 19

0

0