10,000 mAh திறன் கொண்ட ஓப்போ பவர் பேங்க் 2 இந்தியாவில் அறிமுகமானது | விலையுடன் கூடிய முழு விவரங்கள் இங்கே

18 August 2020, 5:41 pm
Oppo 10000mAh 18W Power Bank 2 Launched in India at Rs.1,299
Quick Share

ஓப்போ இன்று 10,000 mAh திறன் கொண்ட ஓப்போ பவர் பேங்க் 2 சாதனத்தை இந்தியாவில் ரூ.999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது மற்றும் பிளிப்கார்ட்டில் இருந்து வாங்குவதற்கு கிடைக்கிறது.

ஓப்போ பவர் பேங்க் 2 சாதனம் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது மற்றும் PD மற்றும் QC போன்ற பல்வேறு முக்கிய நெறிமுறைகளுடன் இணக்கமானது, மேலும் இது உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் பலவற்றை ரீசார்ஜ் செய்ய உதவுகிறது. இதில் ஒரு பவர் பட்டன் மற்றும் முன்பக்கத்தில் ஒரு LED இண்டிகேட்டர் உள்ளது.

இந்த பவர் பேங்க் மெலிதானது, மேலும் இது இலகுரக 3D வளைந்த வடிவத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் இரண்டு வழக்கமான யூ.எஸ்.பி போர்ட்களையும், டைப்-C போர்ட்டையும் பெறுவீர்கள், இது பவர் பேங்கிலேயே சார்ஜ் செய்யப் பயன்படுகிறது.

இது 2-இன்-ஒன் சார்ஜிங் கேபிளுடன் வருகிறது, இது வேறுபட்ட இணக்கமான மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் யூ.எஸ்.பி-C சாதனங்களை எந்த இடையூறும் இல்லாமல் இணைக்க உதவுகிறது.

ஓப்போ தன்னிடம் 12-காரணி பாதுகாப்பு உத்தரவாதம் இருப்பதாகக் கூறுகிறது, இது அதிக வெப்பம், அவுட்புட் ஷார்ட்-சர்கியூட் மற்றும் இன்புட் அண்டர்-வோல்டேஜ் போன்ற சிக்கல்களிலிருந்து பாதுகாப்பானது என்பதை உறுதி செய்கிறது.

வாட்ச் அல்லது டி.டபிள்யூ.எஸ் ஹெட்ஃபோன்கள் போன்ற குறைந்த மின்னோட்ட சாதனங்களை நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டுமானால், நீங்கள் இந்த பவர்பேங்கின் பொத்தானை இருமுறை அழுத்தலாம், மேலும் இது குறைந்த மின்னோட்ட சார்ஜிங் பயன்முறைக்கு மாறும்.

புதிய பவர் பேங்க் 4 மணி நேரத்தில் 18W சார்ஜருடன் சார்ஜ் செய்யப்படுகிறது. பரிமாணங்களைப் பொறுத்தவரை 120 x 90 x 55 மிமீ அளவையும் மற்றும் அதன் 273 கிராம் எடையையும் கொண்டது.

Views: - 51

0

0