ஓப்போ A53 (2020) ஸ்மார்ட்போனின் விலைகள் அதிரடி குறைப்பு | புதிய விலை விவரங்கள் இங்கே

4 May 2021, 3:55 pm
Oppo A53 (2020) receives a price cut in India
Quick Share

2020 ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ A53 2020 ஸ்மார்ட்போன்களின் இரண்டு வகைகளுக்கும் இந்தியாவில் ரூ.2000 விலைக் குறைப்பை ஓப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு வகைகளும் இப்போது குறைக்கப்பட்ட புதிய விலைகளுடன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ரூ.12,990 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஜிபி + 64 ஜிபி மாடலின் விலை இப்போது ரூ.10,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் ஆகும் நேரத்தில் ரூ.15,490 ஆக விலைக்கொண்டிருந்த 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை இப்போது ரூ.12,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பு நிரந்தரமானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் வரும் நாட்களில் மேலும் பல சலுகைகளும் இந்த மாடலுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

சரி, இந்த  ஓப்போ A53 (2020) ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கு?

ஓப்போ A53 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேவை 90 Hz refresh rate உடன் 1600 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன், 90 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 20:9 திரை விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 செயலி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்க முடியும். பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, ஓப்போ A53 இல் 13 MP மெயின் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேம் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.

ஓப்போ A53 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இல் கலர் OS 7.2 உடன் இயங்குகிறது, மேலும் 5,000 mAh பேட்டரி உடன் 18W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இணைப்பு அம்சங்களில் 4 ஜி LTE, வைஃபை 802.11 ac, புளூடூத் 5, GPS / GLONASS, யூ.எஸ்.பி டைப்-C மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய அம்சங்கள் உள்ளன.

Views: - 136

0

0

Leave a Reply