64 MP குவாட் கேமரா உடன் ஓப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி! விலை & அம்சங்கள்

18 January 2021, 5:19 pm
Oppo Reno 5 Pro 5G with Dimensity 1000+, 64MP quad rear cameras launched in India
Quick Share

ஓப்போ ரெனோ 5 புரோ 5ஜி இறுதியாக இன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ ரெனோ 5 புரோ 5ஜி 8 ஜிபி ரேம், குவாட் ரியர் கேமரா அமைப்பு, மீடியா டெக் டைமன்சிட்டி 1000+ SoC மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. ஓப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி உடன் கூடுதலாக, இந்நிறுவனம் ஓப்போ என்கோ X TWS வயர்லெஸ் இயர்பட்ஸையும் ரூ.9999 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஓப்போ ரெனோ 5 புரோ 5ஜி: விலை 

ஒரே ஒரு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுக்கு இந்த தொலைபேசி ரூ.35,990 விலைக்கொண்டுள்ளது. இது அஸ்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது. இந்த தொலைபேசியைப் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இருந்து ஜனவரி 22 முதல் வாங்க இன்று முதல் முன்பதிவுச் செய்ய வேண்டும்.

ஓப்போ ரெனோ 5 புரோ 5 ஜி விவரக்குறிப்புகள்

ஓப்போ ரெனோ 5 புரோ 5 ஜி ஆண்ட்ராய்டு 11 ஐ கலர் OS 11.1 உடன் இயக்குகிறது மற்றும் 2400 × 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், 90 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 120 Hz தொடு மாதிரி வீதத்துடன் 6.55 அங்குல முழு HD+ வளைந்த OLED பேனலைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ SoC உடன் இயக்கப்படுகிறது, அதோடு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் இதில் உள்ளது.

64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸின் கலவையுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பு, 119 டிகிரி FoV மற்றும் 2.2 துளை கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவற்றை பின்பக்கத்தில் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் முன்பக்கத்தில் உள்ளது.

ஓப்போ ரெனோ 5 புரோ 5 ஜி 5 ஜி ஆதரவு, இரட்டை 4ஜி VoLTE, வைஃபை 802.11 ac (2.4 GHZ + 5 GHZ), புளூடூத் 5, GPS/GLONASS/Beidou, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-C போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் உள்ளிட்ட இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது. தவிர, தொலைபேசி 65W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,300 mAh பேட்டரியைப் பேக் செய்கிறது.

Views: - 0

0

0