அட என்னப்பா சொல்றீங்க! இந்த ஓப்போ போன்ல 64 MP கேமரா இருக்கா?

17 April 2021, 4:29 pm
Oppo Reno 6 Pro smartphone can be launched with 64MP camera, the report reveals
Quick Share

ஓப்போ தனது சிறப்பு ரெனோ தொடரின் கீழ் ஓப்போ ரெனோ 6 ப்ரோவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது பிரபல தகவல் கசிவு தலமான Digital Chat Station ஓப்போ ரெனோ 6 ப்ரோவின் விவரக்குறிப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக ஒரு அம்சம் பயனர்களைக் கவர்ந்திழுக்க கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. அது என்ன என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.

தகவல் கசிவு தளம் Digital Chat Station வழங்கிய தகவல்களைப் பொறுத்தவரை, ஓப்போ ரெனோ 6 ப்ரோ 6.55 அங்குல AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும், இது 1080 x 2400 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. மேலும், நான்கு கேமரா அமைப்பு இந்த தொலைபேசியில் இருக்கும். அதில் ஒன்று 64MP கேமரா கொண்டதகா இருக்கும்.

ஆனால் மற்ற கேமரா சென்சார்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், பயனர்கள் 4500 mAh பேட்டரி உடன் ஓப்போ ரெனோ 6 ப்ரோவில் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். அதோடு இணைப்பு அம்சங்களில் Wi-Fi, GPS, யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை இருக்கும்.

ஓப்போ ரெனோ 6 ப்ரோ: எதிர்பார்க்கப்படும் விலை

வெளியான தகவல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், ஓப்போ ரெனோ 6 ப்ரோவின் விலை பிரீமியம் வரம்பில் இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும், இது பல வண்ண விருப்பங்களில் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர, இப்போதைக்கு ரெனோ 6 ப்ரோவின் வெளியீடு, விலை மற்றும் அம்சங்கள் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை.

Views: - 56

0

0