எச்சரிக்கை! பழைய வாகனங்களின் RC புதுப்பிக்க அதிக கட்டணம்!

Author: Dhivagar
18 March 2021, 6:16 pm
Pay more for RC renewal of old vehicles from October
Quick Share

உங்களிடம் 15 வருடமாக ஒரு கார் அல்லது வேறு ஏதேனும் வாகனம் இருந்தால், அத்தகைய வாகனங்களின் RC யைப் புதுப்பிக்க நீங்கள் ஒரு பெரிய தொகையை செலுத்த வேண்டியிருக்கும். 

சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம், பழைய வாகனத்தை வைத்திருப்பவர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை விளக்கும் வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக யூனியன் பட்ஜெட்டில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட பரந்த வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, 20 வருடத்திற்கு மேற்பட்ட பயணிகள் வாகனங்கள் மற்றும் 15 வருடத்திற்கு மேற்பட்ட வணிக வாகனங்களைத் தொடர்ந்து வைத்திருக்க கட்டாய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதன்படி, காரின் RC புதுப்பித்தலுக்கு ஒரு வாகன உரிமையாளர் ரூ.5,000 செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ஒரு பைக்கிற்கு, உரிமையாளர் தற்போதைய ரூ.300 க்கு பதிலாக 1000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்த அறிவிப்பால் பஸ் மற்றும் டிரக் ஆபரேட்டர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். 15 வருடத்திற்கு மேற்பட்ட பேருந்து அல்லது டிரக்கிற்கான ஃபிட்னஸ் புதுப்பித்தல் சான்றிதழைப் பெறுவதற்கு அதன் உரிமையாளர்களுக்கு 21 மடங்கு அதிகம் செலவாகும். புதிய விதிகளின்படி, அவற்றைப் புதுப்பிக்க, ரூ.12,500 செலுத்த வேண்டி இருக்கும்.

இந்த மாற்றங்கள் வாகன ஸ்கிராப்பிங் கொள்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் படி, வாகனத்தின் பதிவு புதுப்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், மாதத்திற்கு ரூ.300 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். மறுபுறம், வணிக வாகனங்களின்  ஃபிட்னஸ் சான்றிதழைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.

மோட்டார் சைக்கிள் பதிவு கட்டணம் ரூ.300 ஆகவும், புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.1000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், முச்சக்கர வண்டிகளின் பதிவு விகிதம் ரூ.600 ஆகவும் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.2,500 ஆகவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரின் பதிவு கட்டணம் ரூ.600 ஆகவும், புதுப்பித்தல் கட்டணம் ரூ.5,000 ஆகவும் இருக்கும். இதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.5,000 ஆகவும் மற்றும் அதன் புதுப்பித்தலுக்கான கட்டணம் ரூ.40,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக வாகனங்களைப் பொருத்தவரை, ஒரு மோட்டார் சைக்கிளுக்கு புதிய ஃபிட்னஸ் சான்றிதழ் பெற ரூ.500 செலவாகும், சான்றிதழை புதுப்பிக்க ரூ.1,000 செலவாகும். முச்சக்கர வண்டிகளுக்கு, புதிய ஃபிட்னஸ் சான்றிதழ் பெற ரூ.1,000 வசூலிக்கப்படும், சான்றிதழை புதுப்பிக்க, ரூ.3,500 செலவாகும்.

ஒரு டாக்ஸியைப் பொறுத்தவரை, ஒரு புதிய ஃபிட்னஸ் சான்றிதழ் ரூ.1,000 க்கு வழங்கப்படும், அதே நேரத்தில் சான்றிதழை புதுப்பிக்க, ரூ.7,000 செலவாகும். நடுத்தர பொருட்கள் அல்லது பயணிகள் வாகனங்களுக்கு, ஃபிட்னஸ் சான்றிதழ் பெற ரூ.1,300 செலவாகும், அதே நேரத்தில் சான்றிதழை புதுப்பிக்க ரூ.10,000 செலவாகும். இதேபோல், ஒரு பஸ் அல்லது டிரக்கிற்கான புதிய ஃபிட்னஸ் சான்றிதழ் பெற, ரூ.1,500 கட்டணம் விதிக்கப்படும், அதே நேரத்தில் அதை புதுப்பிப்பதற்கான செலவு ரூ.12,500 ஆகும்.

Views: - 203

0

0