பெட்ரோல், CNG எரிபொருள் வசதியுடன் பியாஜியோ Ape HT அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Dhivagar
26 July 2021, 3:15 pm
Piaggio Ape HT Three-Wheelers Launched In India
Quick Share

பியாஜியோ வெஹிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் புதிய ApeHT முச்சக்கர வாகனத்தை ரூ.2.24 லட்சம், எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த முச்சக்கர வாகனங்கள் பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள் விருப்பங்களுடன் இரண்டு வகைகளில் கிடைக்கின்றன.

மாடல்கள் & விலை நிர்ணயம்

  • கார்கோ (பெட்ரோல்): ரூ .2.24 லட்சம்
  • கார்கோ (CNG): ரூ .2.45 லட்சம்
  • பயணிகள் (CNG): ரூ .2.55 லட்சம்

அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் (இந்தியா) விலைகள் என்பதை நினைவில் கொள்க

வடிவமைப்பு & அம்சங்கள்

Ape HT சரக்கு வாகன வரம்பில் கதவுகளில் நேர்த்தியான கிராபிக்ஸ் மற்றும் ஒரு ஹாலஜன் ஹெட்லேம்ப் மற்றும் டர்ன்-சிக்னல் இண்டிகேட்டர் ஆகியவை ஒரு கிளஸ்டர் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதர வசதிகள்:

  • அனலாக் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்
  • பாதுகாப்பு கதவுகள்
  • அலுமினிய கிளட்ச்
  • 235 மிமீ கிரௌண்டு கிளீயரன்ஸ்

இன்ஜின் & இயந்திர அமைப்புகள்

ApeHT முச்சக்கர வாகனம் 300 சிசி ஒற்றை சிலிண்டர் திரவ-குளிரூட்டப்பட்ட இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது, இது பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள் விருப்பங்களில் இயங்கக்கூடியது. இந்த இன்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • அதிகபட்ச சக்தி: 11.4bhp @ 4,200rpm
  • அதிகபட்ச திருப்புவிசை : 22.35Nm @ 2800rpm

CNG மாடல் 38 கி.மீ/கிலோ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது, மேலும் 60 லிட்டர் கொள்ளளவுக் கொண்ட ஃபியூயல் டேங்க் உடன் 2.8 லிட்டர்
ஃபியூயல் டேங்கைக் கொண்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் சஸ்பென்ஷன் கடமைகள் முன்புறத்தில் ஹெலிகல் ஸ்பிரிங் மற்றும் பின்புறத்தில் ரப்பர் ஸ்பிரிங் வழியாக கையாளப்படுகின்றது. சரக்கு வரம்பு 3 வகைகளில் 5.0 அடி, 5.5 அடி மற்றும் 6.0 அடி டெக் நீள விருப்பங்களுடன் மாறுபட்ட சுமை தாங்கும் திறன் மற்றும் பயன்பாடுகளுடன் கிடைக்கிறது. கூடுதலாக, இதில் உள்ள அலுமினிய கிளட்ச் 30,000 கி.மீ ஆயுட்காலம் கொண்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 195

0

0