IRCTC உடன் ஆதார், PAN இணைப்பு | ரயில்வே டிக்கெட் முன்பதிவு மோசடியை தடுக்க புது முயற்சி

Author: Dhivagar
28 June 2021, 9:05 am
Plan afloat to link Aadhaar, PAN to passengers' login info IRCTC
Quick Share

ரயில்வே டிக்கெட் முன்பதிவு மோசடியை நிறுத்த IRCTC ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. பயணிகள் IRCTC போர்ட்டலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவர்களின் உள்நுழைவு தரவை அவர்களின் ஆதார், PAN உடன் இணைக்கும் ஒரு புதிய அமைப்பை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதார் மற்றும் பான் கார்டு மட்டுமல்ல, IRCTC பாஸ்போர்ட் போன்ற பயணிகளின் அடையாளம் காணும் பிற ஆவணங்களுடனும் இணைக்கும் என்று கூறப்படுகிறது. 

டிக்கெட் முன்பதிவு IRCTC இணையதளத்தில் இவை அனைத்தும் நடக்கும். இந்த தகவலை ரயில்வே பாதுகாப்பு படை (RPF) இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்தார். ரயில் டிக்கெட் முன்பதிவில் நடக்கும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் முயற்சியாக இந்த இணைப்பை அமைப்பு உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்புப் படை மனித உளவுத்துறையின் உதவியுடன் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்தாலும், தரகு நடவடிக்கைகளை பெருமளவு குறைக்க முடியவில்லை.

மே 2021 வரை, 14,257 தரகு நடவடிக்கையில ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதுவரை ரூ.28.34 கோடி மதிப்புள்ள டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை தடுக்கவே இந்த புதிய ஆதார் போன்ற அடையாள அட்டை இணைப்பு செயல்முறையைக் கொண்டுவர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயணிகள் பயணம் செய்யும் போது பாதுகாப்பு தொடர்பான புகார்களை அரசு ரயில்வே காவல்துறை மற்றும் RPF ஆகியவற்றில் பதிவு செய்ய ரயில் சுரக்ஷா பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கண்காணிப்பு மற்றும் பதிலளிப்பு பொறிமுறையை சிசிடிவி கவரேஜ் உடன் 6,049 நிலையங்களிலும் மற்றும் அனைத்து பயணிகள் ரயில் பெட்டிகளிலும் நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்று அருண்குமார் தெரிவித்துள்ளார்.

Views: - 307

0

0