போகோ F3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியிருக்கு! இதோட விலை என்ன? இதுல என்ன ஸ்பெஷலா இருக்கு?

Author: Dhivagar
23 March 2021, 12:25 pm
Poco F3 launched with SD 870 SoC, 48MP camera and more
Quick Share

போகோ குளோபல் திங்களன்று போகோ X3 ப்ரோவுடன் இணைந்து போகோ F3 ஸ்மார்ட்போனை அறிமும் செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களுடன் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை ஆர்க்டிக் ஒயிட், நைட் பிளாக் மற்றும் டீப் ஓஷன் ப்ளூ கலர் வகைகளில் கிடைக்கும்.

விலையைப் பொறுத்தவரை, சாதனம் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை 349 யூரோக்கள் (தோராயமாக ரூ.30,125). இந்த மாறுபாடு ஆரம்ப கால விற்பனைச் சலுகையாக 299 யூரோக்கள் (தோராயமாக ரூ.25,806) விலையில் கிடைக்கிறது. 

மற்றொரு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை 399 யூரோக்கள் (தோராயமாக ரூ.34,441) விலையில் கிடைக்கிறது. இந்த மாடல் ஆரம்ப கால விற்பனைச் சலுகையாக 349 யூரோக்கள் (தோராயமாக ரூ.30,125) விலையில் கிடைக்கிறது.

போக்கோ F3 விவரக்குறிப்புகள்

போகோ F3 6.67 இன்ச் AMOLED உடன் முழு HD+ ரெசல்யூஷன் மற்றும் 120 Hz ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிஸ்டம்-ஆன்-சிப் உடன் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, சோனி IMX 582 சென்சார், 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 5 MP டெலிமேக்ரோ சென்சார் கொண்ட 48 MP முதன்மை கேமரா கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் இது வருகிறது. இந்த கேமரா பின்புறத்தில் சிறந்த வீடியோக்களுக்காக பிரத்யேக மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், தொலைபேசியில் 20 MP செல்பி கேமரா உள்ளது.

இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,520 mAh பேட்டரியுடன் வருகிறது, இது தொலைபேசியை 100% வரை சார்ஜ் செய்ய 52 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று நிறுவனம் கூறுகிறது. கூடுதலாக, தொலைபேசியில் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் வயர்லெஸ் ஹை ரெஸ் ஆடியோவுடன் இரட்டை ஸ்பீக்கர்களும் உள்ளன.

Views: - 111

0

0