ரூ.10000 க்கும் குறைந்த விலையில் Poco M2 Reloaded இந்தியாவில் அறிமுகம்! விலை & சலுகை விவரங்கள் இதோ

21 April 2021, 4:42 pm
Poco M2 Reloaded is an affordable offering of the Poco M2 with 4GB of RAM.
Quick Share

போகோ தனது பட்ஜெட் விலையிலான M2 ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் போகோ M2 Reloaded என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்  4 ஜிபி ரேம் உடன் வருகிறது, இது மட்டுந்தான் அசல் போகோ M2 க்கும் இதற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம். இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக்கின் ஹீலியோ G80 செயலி, முழு HD+ டிஸ்ப்ளே மற்றும் 5,000 mAh பேட்டரி உள்ளது. போகோ M2 ரீலோடட் ஸ்மார்ட்போனை நிறுவனம் மலிவு விலையில் வழங்குகிறது.

போகோ M2 ரீலோடட் மாடலின் விலை ரூ.9,499 ஆகும், இது இன்று முதல் பிளிப்கார்ட்டிலிருந்து வாங்க கிடைக்கிறது. இது நீலம் மற்றும் சாம்பல் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் கிடைக்கும், மற்றும் போகோ M2 வாங்கும்போது பாங்க் ஆஃப் பரோடா மாஸ்டர்கார்டு டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும். நுகர்வோர் மாதத்திற்கு ரூ.1,584 முதல் No Cost EMI விருப்பத்தையும் தேர்வு செய்யலாம்.

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, போகோ M2 ரீலோடட் 6.53 அங்குல முழு HD+ உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G80 செயலி 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 512 ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்க மைக்ரோ SD கார்டு ஸ்லாட் ஆதரவுடன் வருகிறது.

போகோ M2 ரீலோடட் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக, போகோ M2 ரீலோடட் 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இதன் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி VoLTE, டூயல் SIM, புளூடூத் 5.0, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், யூ.எஸ்.பி டைப்-C போர்ட் மற்றும் IR பிளாஸ்டர் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கும்.

Views: - 1755

0

0