குறைக்கடத்திகள் பற்றாக்குறையால் விலை உயர்ந்தது POCO M3 ஸ்மார்ட்போன்!

19 July 2021, 9:55 am
POCO M3 becomes costlier in India by Rs. 500
Quick Share

குறைக்கடத்திகள் பற்றாக்குறையின் காரணமாகவும் மூலப்பொருட்கள் மற்றும் போக்குவரத்தின் விலை உயர்வு காரணமாகவும், சியோமி ஆதரவுடைய POCO தனது பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போனான POCO M3 இன் விலையை இந்தியாவில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

  • 6 ஜிபி / 64 ஜிபி மற்றும் 6 ஜிபி / 128 ஜிபி மாடல்களில் விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
  • புதிய விலைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங் தளங்கள் என இரண்டுக்குமே பொருந்தும். 
  • POCO M3 ஒரு பிளாஸ்டிக் உடலமைப்புடன் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு, ஒரு குறிப்பிடத்தக்க கீழ்பக்க பெசல் மற்றும் ஒரு பக்கமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது ஒரு மூன்று கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது.
  • இந்த சாதனம் 6.53 அங்குல முழு-HD+ (1080×2340 பிக்சல்கள்) IPS LCD திரையை 19.5: 9 என்ற விகிதத்தில் கொண்டுள்ளது.
  • இது கூல் ப்ளூ, போகோ மஞ்சள் மற்றும் பவர் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
  • POCO M3 இல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48MP (f / 1.8) முதன்மை சென்சார், 2MP (f / 2.4) மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP (f / 2.4) டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 8MP (f / 2.1) செல்பி கேமரா உள்ளது.
  • POCO M3 ஒரு ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்டிலிருந்து 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான MIUI 12 இல் இயங்குகிறது மற்றும் 6000 mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.
  • இணைப்பிற்காக, கைபேசி டூயல்-பேன்ட் வைஃபை, புளூடூத் 5.0, GPS, ஒரு ஹெட்போன் ஜேக் மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
  • சமீபத்திய விலை உயர்வைத் தொடர்ந்து, போகோ M3 போனின் 4 ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ.10,499 விலையிலும், 6 ஜிபி / 64 ஜிபி மற்றும் 6 ஜிபி / 128 ஜிபி மாடல்கள் முறையே ரூ.11,499 விலையிலும் மற்றும் ரூ.12,499 விலையிலும் விற்பனைச் செய்யப்படும். இது பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.

Views: - 107

0

0

Leave a Reply