போகோ M3 பிளிப்கார்ட்டில் 6 ஜிபி ரேம் உடன் அறிமுகமாவது உறுதியானது!
30 January 2021, 6:52 pmபிப்ரவரி 2 ஆம் தேதி போகோ M3 இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக போகோ இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது. இப்போது, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போகோ M2 போனின் அடுத்த பதிப்பிலான புதிய ஸ்மார்ட்போன் குறித்து இன்னும் சில விவரங்கள் வெளியாகி உள்ளன. போகோ M3 மலிவு விலையில் வரவுள்ளது என்பது நமக்குத் தெரியும், இப்போது அறிமுகத்திற்கு சற்று முன்னதாக, பிளிப்கார்ட்டில் பட்டியலில் தோன்றியுள்ளது.
போகோ M3 இன் வெளியீடு முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களுடன் தளத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. போகோ M3 இந்தியாவில் 6 ஜிபி வேரியண்டில் வரப்போகிறது என்பதை பிளிப்கார்ட் பட்டியல் உறுதிப்படுத்துகிறது. நவம்பர் மாதத்தில் உலகளவில் அறிவிக்கப்பட்ட போகோ M3 மாடல் 4 ஜிபி பதிப்பில் மட்டுமே வந்தது.
போகோ M3 இந்தியாவிலும் 4 ஜிபி பதிப்பைப் பெறப்போகிறது. ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இது 4 ஜிபி / 64 ஜிபி மற்றும் 4 ஜிபி / 128 ஜிபி வகைகளில் வந்தது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் 6 ஜிபி பதிப்பிற்கு, யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பகத்துடன் 6 ஜிபி / 128 ஜிபி உள்ளமைவை எதிர்பார்க்கலாம். இந்த தொலைபேசியின் விலை சுமார் ரூ .10,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, 6.53 அங்குல FHD + டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC உடன் இது இருக்கக்கூடும். போகோ M3 ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 12 உடன் வெளியாகும்.
போகோ M3 பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்புடன் 48 MP பிரைமரி ஷூட்டர், 2 MP ஆழம் சென்சார் மற்றும் 2 MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 8 MP ஷூட்டர் உள்ளது.
ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜ் சப்போர்ட்டுடன் 6,000 mAh பேட்டரியுடன் வரப்போகிறது மற்றும் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி LTE, டூயல் பேண்ட் WiFi, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.
0
0