பயனர்களைக் குஷிப்படுத்த புது அறிவிப்பை வெளியிட்டது ரிலையன்ஸ் ஜியோ!

By: Dhivagar
9 October 2020, 8:36 am
Postpaid Users Porting to Jio Will Carry Forward Credit Limit, Need Not Pay Security Deposit
Quick Share

போஸ்ட்பெய்ட் பிளஸ் அறிமுகத்துடன் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ போட்டி நிறுவனங்களின் சந்தாதாரர்களுக்கு கிரெடிட் லிமிட்டை இழக்காமல் ஜியோவின் புதிய திட்டங்களுக்கு மாறுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. 

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள் ஜியோவுக்கு எந்தவொரு பாதுகாப்பு வைப்புத்தொகையும் செலுத்தத் தேவையில்லை. ஏனெனில், இந்த பாதுகாப்பு வைப்புத் தொகை விஷயம் சமீபத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்கியது. ஜியோ தனது இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடாமல், அத்தகைய கட்டணத்தை வசூலிப்பதாக இது TRAI குற்றச்சாட்டை முன்வைத்தது. அதையடுத்து, இப்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சலுகையைப் பயன்படுத்த, ஜியோவுக்கு போர்ட் செய்ய விரும்பும் எல்லோரும் அவர்கள் போர்ட் செய்ய விரும்பும் எண்ணிலிருந்து 88501-88501 க்கு வாட்ஸ்அப்பில் ஒரு ‘Hi’ மெசேஜ் அனுப்ப வேண்டும். பின்னர் அவர்கள் தங்களின் தற்போதைய கிரெடிட் லிமிட்டை தற்போதைய கேரியருடன் பயன்படுத்த உறுதிப்படுத்துமாறு கேட்கப்படுவார்கள். அது சரிபார்க்கப்பட்டதும், பயனர் ஏதேனும் ஜியோ ஸ்டோரிலிருந்தும் தங்கள் ஜியோ சிம் வாங்கிக்கொள்ளலாம் அல்லது 24 மணி நேரத்திற்குள் வீட்டிற்கே ஹோம் டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.

சலுகை போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களுக்கு (போட்டியிடும் ஆபரேட்டர்கள், அதாவது Vi மற்றும் ஏர்டெல்) மட்டுமே என்பதை நினைவில் கொள்க, அவர்கள் தற்போதைய கேரியருடன் ஏற்கனவே கிரெடிட் லிமிட்டை கொண்டிருக்க வேண்டும். புதிய பயனர்கள் அல்லது தங்கள் ப்ரீபெய்ட் எண்களை ஒரு போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு மாற்ற விரும்பும் எல்லோரும், வைப்புத்தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

ஒரு நினைவூட்டலாக, ரிலையன்ஸ் ஜியோ கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் பிரிவில் ரூ.399 முதல் ரூ.1,499 விலையில் புதிய திட்டங்களை அறிவித்தது. ‘போஸ்ட்பெய்ட் பிளஸ்’ என சந்தைப்படுத்தப்பட்ட இந்த புதிய திட்டங்கள், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களுக்கான சந்தாக்கள் உட்பட கூடுதல் பலன்களை வழங்குகின்றன.

Views: - 59

0

0