உலகளவில் PUBG க்கு ஏப்ரல் 29 தான் கடைசி தேதி! அசால்ட்டாக இருக்கும் PUBG கேமர்கள்!

Author: Dhivagar
2 April 2021, 6:25 pm
PUBG Lite shutting down globally on April 29, here are 5 alternative games you can try
Quick Share

Battle Royale game இன் லைட் பதிப்பான PUBG lite ஏப்ரல் 29 ஆம் தேதியோடு அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட போகிறது. இந்த கேமை உருவாக்கிய கிராஃப்டன் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு செய்தி மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

நுழைவு நிலை குறைந்த அம்சங்களுடனான மொபைல் சாதனங்களுக்காக 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட PUBG லைட் கேமிங் பயன்பாடு, இனி ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு மேல் நிரந்தரமாக செயல்படாது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய அரசு PUBG மொபைல் மற்றும் PUBG மொபைல் லைட் இரண்டையுமே இந்தியாவில் தடை செய்தது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் இந்த PUBG கேம் தடை செய்யப்பட்டது. 

PUBG கார்ப்பரேஷன் பின்னர் அவர்கள் டென்செண்டுடனான தங்கள் கூட்டணியைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர், மேலும் விரைவான தீர்வைப் பெற இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தனர். ஆனால், இதுவரை PUBG கேமின் உரிமை நிறுவனம் எடுத்த முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை. உலகளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் 50 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள PUBG பயனர்களுடன், இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 33 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து ஆரம்பகாலக்கட்டத்தில் இந்த கேம் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், இந்த கேம் பின்னர் இந்தியாவில் தடைச் செய்யப்பட்டது.

என்னதான், கேம் இன்னமும் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல கேமர்கள் VPN பயன்படுத்தி இன்னும் இந்த கேமை விளையாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதனால் PUBG யே இருக்கப்போ PUBG lite  எதுக்கு என்று அசால்ட்டாக இருக்கின்றனர் PUBG கேமர்கள்.

Views: - 103

0

0