PUBG கேம் ரசிகர்களுக்கு மிக மிக சந்தோசமான செய்தி! 6 கோடி பரிசுடன்…!
24 November 2020, 3:52 pmஇந்தியாவில் PUBG ஆர்வலர்களுக்கு இறுதியாக செம சந்தோசமான செய்தி வந்துள்ளது. PUBG வெறியர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நாள் இறுதியாக வந்துவிட்டது. PUBG மொபைல் இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டு சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த விளையாட்டு மீண்டும் வர தயாராகிவிட்டது. சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கும் தகவலின்படி, PUBG மொபைல் இந்தியா ரூ.6 கோடி பரிசுககளையும் வழங்க உள்ளதாம்.
PUBG மொபைல் இந்தியா – ரீ-என்ட்ரி
பிரபலமான கேம் உடனடியாக மீண்டும் வருவதற்கான உறுதியளிக்கும் சான்றுகள் பல உள்ளன. ஒன்று, PUBG மொபைல் இந்தியா கேம் MCA இணையதளத்தில் காணப்பட்டது. தடைசெய்யப்பட்ட விளையாட்டு கார்ப்பரேட் விவகார அமைச்சின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது இந்தியாவில் உடனடி துவக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அது மட்டும் இல்லை. ட்விட்டரில் ஒரு டிப்ஸ்டர், PUBG மொபைல் இந்தியா இன்று (நவம்பர் 24) ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய மொபைல் கேமிங் துறையில் மீண்டும் நுழைவதன் ஒரு பகுதியாக பரிசு விவரங்களுடன், நிறுவனம் மறு வெளியீட்டு விவரங்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PUBG மொபைல் இந்தியா பரிசு விவரங்கள்
பரிசுகளைப் பற்றி பேசுகையில், நிறைய இந்திய விளையாட்டாளர்கள் இந்த புதிய தகவலால் உற்சாகமாக உள்ளனர். இந்த அறிக்கைகள் உண்மையாகுமெனில், PUBG மொபைல் இந்தியா இந்திய கேமிங் பிரிவில் மீண்டும் ரூ.6 கோடி பரிசுகளுடன் மாஸாக களமிறங்கும் என்று தெரியவருகிறது. மேலும், வேலைக்கு சேர்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.40,000 முதல் அடுக்கு 1 அணிகளுக்கு ரூ.200,000 வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர, சிறப்பு வகைகளுக்கும் ரொக்கப் பரிசு இருப்பதையும் டிப்ஸ்டர்கள் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக, அதிகபட்ச கால் பயண தூரம் கொண்ட வீரர்கள், அதிகபட்ச ஹெட்ஷாட்களைக் கொண்ட வீரர் மற்றும் இதுபோன்ற பிற அளவுகோல்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பண பரிசு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
0
0