எதிர்பாராத கூட்டணி! PUBG மொபைல் கேம் இந்தியாவில் மீண்டும் வருவது சாத்தியமானது!

9 November 2020, 4:50 pm
PUBG Mobile Partners With Microsoft Azure Cloud Services; Comeback In India Likely
Quick Share

PUBG தடை தான் சில மாதங்களாக வலைத்தளங்களில் இருந்து வரும் முக்கிய பேசுபொருள்களில் ஒன்றாகும். இந்த செயலி வருமா? யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளும், இந்திய அரசாங்கம் தடையை நீக்குமா என்ற கேள்வி கிட்டதட்ட அனைத்து PUBG கேமர்கள் மனதிலும் இருந்த முக்கியமான கேள்விகளாகும். 

இந்தியாவில் பயனர்களைத் திரும்பப் பெற PUBG யும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வந்தது. சமீபத்தில், PUBG மொபைல் கேமின் பெற்றோர் நிறுவனமான கிராஃப்டன் பயனர் தரவின் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் உலகளாவிய கூட்டணியை அறிவித்துள்ளது. 

PUBG மொபைல் இந்தியாவில் மீண்டும் வருமா?

PUBG இந்தியாவில் தடைச் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம் தரவு பாதுகாப்பு. இப்போது, பாதுகாப்பையே முதன்மையாக மனதில் கொண்டு மைக்ரோசாஃப்ட் உடன் கூட்டணி PUBG கூட்டணி வைத்துள்ளது. இதனால் இந்தியாவில் PUBG மீண்டும் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.

இப்போதைக்கு, PUBG மீண்டும் வருவது குறித்து உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பாதுகாப்புக்கு முன்னுரிமைக் கொடுப்பதாலும் இந்திய அரசாங்கத்தின் விதிகளுக்கு இணங்குவதாலும் தடை அகல அதிக வாய்ப்புகள் உண்டு உறுதியான தகவல் வரும்வரை நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

Views: - 23

0

0