கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரூ.29.6 கோடி நன்கொடை | குவால்காம் அறிவிப்பு

3 May 2021, 2:21 pm
Qualcomm To Donate More Than Rs 29 Crores to Help With India's Ongoing COVID-19 Crisis
Quick Share

COVID-19 தொற்றுநோய் நாடு முழுவதும் பரவி வருவதால், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது அலை மிகவும் தீவிரமானதாகி உள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் பல்லாயிர கணக்கான உயிர்கள் பறிபோவதால், உலகின் பல்வேறு முனைகளிலிருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் இப்போது, ​​அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் 4 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29.6 கோடி நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது, இது நாட்டின் தற்போதைய மருத்துவ மற்றும் சுகாதார அவசரநிலைக்கு உதவும் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும்.

மேலும் பல திறமையான பரோபகார நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவ்வாறு சிறந்த நிவாரணங்களை வழங்க முடியும் என்பதை தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும் குவால்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Views: - 92

0

0

Leave a Reply