உங்கள் வீட்டில் குழந்தைகளைக் கண்காணிக்க கியூபோ பேபி கேம் அறிமுகம்! விலை, விவரங்கள் & அம்சங்கள் அறிக

29 September 2020, 3:32 pm
Qubo Baby Cam From Hero Electronix Launched In India
Quick Share

ஹீரோ எலெக்ட்ரானிக்ஸ் தனது சமீபத்திய ஸ்மார்ட் பாதுகாப்பு கேமராவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது – அதுதான் “கியூபோ பேபி கேம்” (Qubo Baby Cam). அவர்களின் முந்தைய சாதனங்களைப் போலன்றி, இந்த மாடல் குழந்தைகள் மீது கவனம் செலுத்துகிறது மற்றும் கேமரா ஒரு மெய்நிகர் குழந்தை உதவியாளராக செயல்பட முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

கியூபோ பேபி கேம் AI ஆல் இயக்கப்படுகிறது, மேலும் இது மெய்நிகர் தொட்டில் மற்றும் பேபி க்ரை மானிட்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த அம்சங்கள் இந்திய பயனர்களுக்கு நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பென்குயின் வடிவ வடிவமைப்பைக் கொண்டு குழந்தைகளை மனதில் வைத்து இந்தத் தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் இரவு பார்வைக்கான ஆதரவுடன் 1080p கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இது எதிரொலி ரத்துசெய்யும் அம்சத்துடன் இருவழிப் பேச்சையும் வழங்குகிறது. இது குழந்தையின் அழுகையைக் கண்டறிய AI ஐப் பயன்படுத்துகிறது மற்றும் குழந்தை அழுதால் பெற்றோருக்கு உடனடி அறிவிப்பை அனுப்பும்.

இது ஸ்மார்ட் மெய்நிகர் தொட்டில் (Smart Virtual Cradle) என்ற அம்சத்துடன் வருகிறது, இது குழந்தை பெற்றோர் நிர்ணயித்த எல்லையைத் தாண்டினால் பெற்றோருக்கு அறிவிப்பை அனுப்புகிறது. அதற்கு மேல், குழந்தை நகர முனைந்தால் அல்லது அழ ஆரம்பித்தால் கியூபோ பேபி கேம் தனிப்பயனாக்கப்பட்ட தாலாட்டையும் பிளே செய்யும்.

கியூபோ பேபி கேம் டைம் லேப்ஸ் வீடியோக்களையும் பதிவு செய்யும், அவற்றை வாட்ஸ்அப் / மின்னஞ்சல் வழியாக பகிரலாம். இது ஒரு குழந்தை கேம் என்பதால், பாதுகாப்பும் ஒரு முக்கிய அம்சமாகும். கேம் மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையகங்களும் இந்தியாவில் அமைந்துள்ளன மற்றும் தரவுகள் தரப்படுத்தப்பட்ட கிரிப்டோகிராஃபிக் வழிமுறைகளால் பாதுகாக்கப்படுகின்றன.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

கியூபோ பேபி கேம் விலை ரூ.7,490 ஆகும் மற்றும் இது இன்று (செப்டம்பர் 29) முதல் அமேசான் மற்றும் FirstCry போன்ற இ-காமர்ஸ் தளங்களில் வாங்க கிடைக்கும். இதேபோல், தயாரிப்பு சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகவும் கிடைக்கும். இப்போது, கியூபோ பேபி கேம் அமேசானில் தள்ளுபடி விலையாக ரூ.5,990க்கு கிடைக்கிறது.

Views: - 1

0

0