E3 2021 நிகழ்வில் AMD CPU உடன் Razor Blade 14 கேமிங் லேப்டாப் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

16 June 2021, 11:30 am
Razer Blade 14 Launched During E3 2021
Quick Share

கேமிங் உபகரணங்கள் தயாரிப்பாளர் ஆன ரேசர் தனது சமீபத்திய கேமிங் லேப்டாப்பை தற்போது நடைபெற்று வரும் E3 கேமிங் மாநாட்டின் போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கேமிங் லேப்டாப் ரேசர் பிளேட் 14 என அழைக்கப்படுகிறது. 

இந்த ரேசர் பிளேட் 14 கேமிங் லேப்டாப் NVIDIA GeForce RTX3080 GPU மற்றும் இரண்டு டிஸ்பிளே விருப்பங்களுடன் இணையாக இருக்கும் AMD செயலி உடன் இயங்கும் முதல் ரேசர் பிளேட் மடிக்கணினியாகவும் அறிமுகம் ஆகியுள்ளது. புதிய ரேசர் பிளேட் 14 அமெரிக்காவில் $1,799.99 (தோராயமாக ரூ.1,32,000) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இது ரேசரின் இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது. 

இந்த மடிக்கணினி 14 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரேசர் பிளேட் 14 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஒரு QHD டிஸ்ப்ளே மற்றும் 144 Hz புதுப்பிப்பு வீதத்துடன் FHD டிஸ்ப்ளே என இரண்டு சேமிப்பக உள்ளமைவுகளில் கிடைக்கிறது. மடிக்கணினி Nvidia GeForce RTX 3080 GPU மற்றும் 16 ஜிபி RAM உடன் இணையாக ஆக்டா கோர் AMD யின் முதன்மை ரைசன் 9 5900 HX CPU உடன் இயக்கப்படுகிறது. 1TB SSD ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும். ரேசர் பிளேட் 14 இல் 720p HD வெப்கேம் உள்ளது, இது ரேசரின் THX ஸ்பேடியல் ஆடியோவுடன் வருகிறது. ரேசர் பிளேட் 14 இன் பேட்டரி 12 மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி லைஃப் வழங்கும் என்று ரேசர் தெரிவித்துள்ளது.

தோற்றத்தைப் பொறுத்தவரை, ரேசர் பிளேட் 14 ஒரு நிலையான ரேசர் மடிக்கணினி போல் தோன்றுகிறது, இதில் ஒரு RGB கீபோர்டு மற்றும் மேற்பக்கத்தில் மூன்று தலைக்கொண்ட பாம்பு சின்னத்தைக் கொண்டிருக்கும்.

சமீபத்திய ஆண்டுகளில் இன்டெல் CPU க்களைக் காட்டிலும் AMD CPU களுடன் கூடிய மடிக்கணினிகள் சிறந்த செயல்திறனையும், பேட்டரி லைஃப்பையும் தருவதால் கேமிங் லேப்டாப்களில் AMD செயலிகளை பயன்படுத்தலாம் என்ற முடிவை ரேசர் எடுத்துள்ளது. 

Views: - 172

0

0