ரூ.10,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது இந்த ரியல்மீ போன்!

9 November 2020, 8:50 pm
Realme 6 available for under Rs 10,000 in Flipkart Diwali Sale
Quick Share

தற்போது நடந்து வரும் பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் போது ரியல்மீ 6 ஐ ரூ.10,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம். நினைவுகூர, இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் இந்த தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

ரியல்மீ 6 தற்போது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுக்கு ரூ.12,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுக்கு ரூ.14,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பண்டிகைச் சலுகையின் கீழ், ஐசிஐசிஐ கிரெடிட் & சிட்டி பேங்க் கிரெடிட் & டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.3,000 தள்ளுபடியை வழங்குவதோடு ரியல்மீ 6 ஐ வாங்கும்போது பிளிப்கார்ட் சில சலுகைகளையும் வழங்குகிறது.

இது 6 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கான ரியல்மீ 6 இன் பயனுள்ள விலையை ரூ.9,999 ஆகக் குறைக்கிறது. தொலைபேசியை காமட் ப்ளூ மற்றும் காமட் வைட் கலர் விருப்பங்களில் வாங்கலாம்.

அறிமுக விலைகள்:

ரியல்மீ 6 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு ரூ .12,999 விலையுடனும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.14,999 விலையுடனும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.15,999 விலையுடனும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் இந்த ஆண்டு GST காரணமாக தொலைபேசி விலை உயர்த்தப்பட்டது.

GST  உயர்வுக்குப் பிறகு:

ரியல்மீ 6 விலை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.14,999 ஆகவும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.15,999 ஆகவும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.16,999 ஆகவும் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.17,999 ஆகவும் விலைகள் உயர்த்தப்பட்டது.

ரியல்மீ 6 – அம்சங்கள்

  • ரியல்மீ 6 இல் 6.5 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டது. 
  • இது ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 64 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ், 8 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றின் கலவையுடன் வருகிறது. 
  • முன்பக்கத்திற்கு, 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது. இது மீடியா டெக் ஹீலியோ G90T செயலி உடன் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது, நிறுவனத்தின் சொந்த ரியல்மீ UI அதன் மேல் இயங்குகிறது மற்றும் 30W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4300 mAh பேட்டரியுடன் வருகிறது.

Views: - 62

0

0