ரியல்மீ 8s 5G, 8i மற்றும் ரியல்மீ பேட் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Dhivagar
10 September 2021, 10:10 am
Realme 8s 5G, 8i, and Realme Pad launched in India
Quick Share

ரியல்மீ தனது சமீபத்திய 8s 5G மற்றும் 8i ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றோடு நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆன ரியல்மீ பேட் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் விலைகள் ரூ.13,999 முதல் ஆரம்பமாகிறது மற்றும் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்.

இந்த கைபேசிகள் முழு HD+ LCD டிஸ்பிளே, மூன்று பின்புற கேமராக்கள், டைனமிக் RAM விரிவாக்க தொழில்நுட்பம் மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது.

Realme 8s 5G, 8i, and Realme Pad launched in India

ரியல்மீ 8s 5ஜி & 8i – அம்சங்கள்

 • ரியல்மீ 8s 5ஜி மற்றும் 8i ஒரு பஞ்ச்-ஹோல் டிசைன் மற்றும் சைட்-மவுண்டட் கைரேகை ரீடர் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
 • ரியல்மீ 8s 5ஜி ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ், 6.5 இன்ச் முழு HD+ (1080×2400 பிக்சல்கள்) LCD திரையைக் கொண்டுள்ளது மற்றும் யுனிவர்ஸ் பர்பில் மற்றும் யுனிவர்ஸ் ப்ளூ நிறங்களில் வழங்கப்படுகிறது.
 • ரியல்மீ 8i 5ஜி ஸ்மார்ட்போன் 120 Hz, 6.6 இன்ச் ஃபுல்-HD+ (1080×2400 பிக்சல்கள்) LCD டிஸ்பிளே 180 Hz டச் சேம்ப்ளிங் ரேட் ஆகியவற்றை கொன்டுள்ளது. இது ஸ்பேஸ் பர்பில் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் வாங்க கிடைக்கும்.
 • ரியல்மீ 8s 5G ஆனது 64MP (f/1.8) முதன்மை ஸ்னாப்பர், 2MP (f/2.4) மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2MP (f/2.4) மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
 • ரியல்மீ 8i மாடலும் இதே போன்ற கேமரா அமைப்பை வழங்குகிறது ஆனால் 50MP பிரதான சென்சார் கொண்டது.
 • செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு, கைபேசிகளில் 16 MP முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.
 • ரியல்மீ 8s 5G மற்றும் 8i ஆகியவை மீடியாடெக் டைமன்சிட்டி 810 மற்றும் மீடியாடெக் ஹீலியோ G96 சிப்செட் உடன் முறையே 8GB RAM மற்றும் 128GB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது.
 • உட்புறத்தில், இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மீ UI 2.0 இல் இயங்குகின்றன மற்றும் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளன.
 • ரியல்மீ 8s 5G 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது, ரியல்மீ 8i 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரியல்மீ 8s 5ஜி விலை விவரங்கள்

ரியல்மீ 8s 5ஜி போனின் விலை 6GB/128GB மாடலுக்கு ரூ. 17,999 விலையும் மற்றும் 8GB/128GB பதிப்பிற்கு ரூ. 19,999 விலையும் கொண்டுள்ளது.

Realme 8s 5G, 8i, and Realme Pad launched in India

ரியல்மீ 8i விலை விவரங்கள்

ரியல்மீ 8i விலை 4GB/64GB மாடலுக்கு ரூ.13,999 ஆகவும் மற்றும் 6GB/128GB மாடலுக்கு ரூ.15,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே செப்டம்பர் 13 மற்றும் செப்டம்பர் 14 முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வரும்.

ரியல்மீ பேட் டேப்லெட்

Realme 8s 5G, 8i, and Realme Pad launched in India
 • ரியல்மீ பேட் 6.4 மிமீ மெல்லிய அலுமினியம் அலாய் பாடி 10.4 இன்ச் WUXGA+ (2000×1200 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே மற்றும் 82.5% ஸ்கிரீன்-டூ-பாடி விகிதத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 • இது 440 கிராம் எடைக்கொண்டது மற்றும் சாம்பல் மற்றும் தங்க நிறங்களில் இவை வாங்க கிடைக்கும்.
 • இந்த சாதனம் முன் மற்றும் பின்புறத்தில் 8 MP கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இரட்டை மைக்ரோஃபோன் உடன் சத்தம் ரத்து செய்யும் ஆதரவையும் கொண்டுள்ளது.
 • ரியல்மீ பேட் மீடியா டெக் ஹீலியோ G80 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 • உட்புறத்தில், இது அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மீ UI உடன் இயங்குகிறது மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,100 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.
 • இந்த டேப்லெட் வைஃபை-ஒன்லி மற்றும் 4 ஜி+ வைஃபை ஆகிய இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது.

Views: - 266

0

0