ENC டெக்னாலஜி உடன் ரியல்மீ பட்ஸ் Q2 அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

30 April 2021, 3:20 pm
Realme Buds Q2 launched with ENC technology, up to 20 hours playback time
Quick Share

ரியல்மீ தனது சமீபத்திய ஆடியோ தயாரிப்பை பாகிஸ்தானில் ரியல்மீ பட்ஸ் Q2 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ரியல்மீ பட்ஸ் Q சாதனத்தின் அடுத்த பதிப்பு இது. இந்த இயர்பட்ஸ் அழைப்புகளின் போது சுற்றுப்புற இரைச்சல் ரத்து (ENC) செய்யும் அம்சத்திற்கான ஆதரவுடன் சார்ஜிங் கேஸ் உடன் மொத்தம் 20 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்கக்கூடியது.

ரியல்மீ பட்ஸ் Q2 தற்போது PKR 3,999 (தோராயமாக ரூ.1,900) அறிமுக விலையில் கிடைக்கிறது. அறிமுக சலுகை முடிந்ததும் இயர்பட்ஸ் PKR 5,999 (தோராயமாக ரூ.2,900) விலையில் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கின்றன.

ரியல்மீ பட்ஸ் Q2 விவரக்குறிப்புகள்

ரியல்மீ பட்ஸ் Q2 ஒரு தனித்துவமான தோற்றத்திற்கான கெலிடோஸ்கோப் போன்ற ஃபினிஷ் உடன் வருகிறது, மேலும் இது காது வடிவமைப்பு மற்றும் 10 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் பாலிமர் கலப்பு டயாபிரம் மற்றும் புதிய பாஸ் பூஸ்ட்+ மேம்பாட்டு தொழில்நுட்பத்துடன் வருகிறது.

ரியல்மீ பட்ஸ் Q2 ஒரு கேமிங் பயன்முறையையும் கொண்டுள்ளது, இது தாமதமில்லாத அனுபவம் மற்றும் தடையற்ற ஆடியோ-வீடியோ ஒத்திசைவுக்காக லேடன்சியை 88 மீட்டர் வரை குறைக்கிறது. பேட்டரி தீரும் போது பயனருக்கு தெரியப்படுத்த சார்ஜிங் கேஸ் LED இண்டிகேட்டர்களுடன் வருகிறது.

பேட்டரியைப் பொறுத்தவரையில், பட்ஸ் Q2 சார்ஜிங் கேஸில் 20 மணிநேர பிளேபேக் கிடைக்கும், அதே நேரத்தில் ஒவ்வொரு இயர்பட்ஸும் 5 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குவம் என்று கூறப்படுகிறது. நிறுவனத்தின் தகவலின்படி, 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 120 நிமிட பிளேபேக்கை இந்த இயர்பட்ஸ் வழங்கும் என்று கூறப்படுகிறது. அழைப்புகளுக்கான சுற்றுச்சூழல் சத்தம் ரத்துசெய்தல் (ENC) அம்சத்தையும் இயர்பட்ஸ் ஆதரிக்கிறது, எனவே மேம்பட்ட அழைப்பு அனுபவத்திற்காக பின்னணி இரைச்சலையும் குறைக்கும் திறனை இது கொண்டுள்ளது.

Views: - 111

0

0

Leave a Reply