ரூ.10000 க்கும் குறைவான விலையில் பிற்பகல் 2 மணிக்கு ரியல்மீ C15 விற்பனை | விவரக்குறிப்புகள், விலை மற்றும் அம்சங்கள்

24 September 2020, 10:49 am
Realme C15 to go on sale today at 2 pm: Specifications, pricing and features
Quick Share

ரியல்மீ C15 இந்தியாவில் ரூ.9,999 ஆரம்ப விலையில் அறிமுகமானது. இது இன்று பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் பிற்பகல் 2 மணிக்கு வாங்குவதற்கு கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ C12 மற்றும் ரியல்மீ பட்ஸ் கிளாசிக் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரியல்மீ C15 விலை & கிடைக்கும் நிலவரம்

ரியல்மீ C15 இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது. 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பகத்தின் விலை ரூ.9,999 மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாடு உங்களுக்கு ரூ.10,999 செலவாகும். இது பவர் ப்ளூ மற்றும் பவர் சில்வர் கலர் வகைகளில் வருகிறது.

ஸ்மார்ட்போன் இன்று பிற்பகல் 2 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் realme.com வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும்.

ரியல்மீ C15 விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 720 x 1,600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டது. ரியல்மீ C15 மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட்டால் இயக்கப்படுகிறது மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

ரியல்மீ C15 பின்புறத்தில் 13 MP AI குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. சதுர வடிவ கேமரா தொகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த கேமரா அமைப்பில் 13 MP பிரைமரி லென்ஸ், 2 MP போர்ட்ரெய்ட் லென்ஸ், 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6000 mAh பேட்டரி உள்ளது, இது 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Views: - 6

0

0