Realme C20: இன்று முதல்! 7000 ரூபாய்க்கும் குறைவான விலையில் இது நல்ல ஸ்மார்ட்போனா?

13 April 2021, 12:31 pm
Realme C20 to go on sale from today; check price, camera, specifications and much more
Quick Share

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மீ, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதன் நுழைவு நிலை ரியல்மீ C20 பட்ஜெட் ஸ்மார்ட்போனை பயனர்களுக்கு ஏப்ரல் 13, செவ்வாய்க்கிழமை (இன்று) மதியம் 12 மணி முதல் realme.com, இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் மெயின்லைன் சேனல்களில் விற்பனைக்கு வழங்க உள்ளது.

ரியல்மீ C21 மற்றும் ரியல்மீ C25 ஆகியவற்றுடன் ரியல்மீ C தொடரில் ரியல்மீ C20 சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகைகளும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய திரை, மெகா பேட்டரி லைஃப், வலுவான செயல்திறன், சிறந்த கேமரா தரம் ஆகியவற்றுடன் சிறந்த அனுபவத்தைக் குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை:

ரியல்மீ C20 (2 ஜிபி + 32 ஜிபி) இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் – கூல் கிரே மற்றும் கூல் ப்ளூ. இது முதல் 10 லட்சம் பயனர்களுக்கு ரூ.6,799 எனும் அறிமுக விலையில் கிடைக்கும். அதன்பிறகு, ரியல்மீ C20 விலை ரூ.6,999 ஆக நிர்ணயம் செய்யப்படும்.

ரியல்மீ C20 வாங்கலாமா?

ரியல்மீ C20 6.5 அங்குல டிஸ்பிளே உடன் ஒரு பெரிய காட்சியமைப்பைக் கொண்டுள்ளது, ஸ்மார்ட்போனில் மினி டிராப் டிஸ்ப்ளே வடிவமைப்பு உள்ளது. இந்த சாதனம் 5000 mAh பிரமாண்டமான பேட்டரியுடன் 10W சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

இந்த சாதனம் மீடியா டெக் ஹீலியோ G35 SoC IMG Power VR GE83220, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இதை 256 ஜிபி வரை மைக்ரோ SD கார்டு வழியாக மேலும் விரிவாக்கவும் முடியும். இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான ரியல்மீ UI ஸ்கின் உடன் இயங்குகிறது மற்றும் 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

ரியல்மீ C20 பின்புறத்தில் ஒற்றை 8 MP சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் மற்றும் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ அரட்டைகளுக்காக 5 MP ஸ்னாப்பர் கொண்டுள்ளது. இணைப்பு அம்சங்களில் டூயல்-பேன்ட் வைஃபை, புளூடூத் 5.0, GPS மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை அடங்கும்.

மேற்சொன்ன சிறப்பான அம்சங்களுடன் ரூ.6,799 விலையில், ரியல்மீ c20 ஒரு நல்ல  தேர்வாக இருக்கும்.

Views: - 79

0

0