இந்தியாவில் குறைந்த விலையில் 6000 mAh பேட்டரி உடன் Realme C25s அறிமுகம் | விவரங்கள் இங்கே

8 June 2021, 6:51 pm
Realme C25s launched in India
Quick Share

ரியல்மீ இன்று தனது புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ C25s என்று அழைக்கப்படுகிறது. இந்த தொலைபேசி இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ.9,999 விலையிலும் மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.10,999 விலையிலும் கிடைக்கிறது. வாட்டர் கிரே மற்றும் வாட்டர் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு realme.com, Flipkart.com மற்றும் முக்கியமான விற்பனையகங்கள் மூலம் கிடைக்கும்.

Realme C25s விவரக்குறிப்புகள்

ரியல்மீ C25s 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன், 60 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 570 நைட்ஸ் உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் முன் கேமராவை வைக்க திரையில் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது.

ரியல்மீ C25s மீடியாடெக் ஹீலியோ G85 SoC உடன் 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD கார்டு வழியாக ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கான ஆதரவும் இருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை, 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றின் கலவையுடன் சதுர வடிவ டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

ரியல்மீ C25s 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ரியல்மீ UI 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 OS உடன் இயங்குகிறது. தொலைபேசியின் பின் பேனலில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம் ஆதரவு, 4ஜி VoLTE, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 b/g/n, புளூடூத் 5.0 மற்றும் பல அம்சங்கள் உள்ளன. இது 9.6 மிமீ தடிமன் மற்றும் 209 கிராம் எடை கொண்டது.

Views: - 116

0

0

Leave a Reply