HP, லெனோவா, Dell லேப்டாப் எல்லாம் தெறிக்கப்போகுது… வரப்போகுது ரியல்மீ லேப்டாப்!

6 May 2021, 4:30 pm
Realme First Laptop Expected To Launch This Year
Quick Share

இந்தியாவில் படிப்படியாக ஸ்மார்ட்போன் மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் பிரிவில் நுழைந்த பிறகு, நாட்டில் ஒரு புதிய பிரிவில் நுழைய ரியல்மீ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2021 ஆண்டிற்குள் இந்தியாவில் மடிக்கணினி பிரிவில் ரியல்மீ நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்திடம் இதுகுறித்து கேட்டபோது, அடுத்த மூன்று மாதங்களில் மடிக்கணினி வாங்க கிடைக்கும் என்று ரியல்மீ பதிலளித்துள்ளது.

எனவே, நிறுவனம் தனது முதல் மடிக்கணினியை இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது.

அது மட்டுமில்லாமல், லேப்டாப் விற்பனையில் கோடி கட்டி பறக்கும் HP, லெனோவா, Dell போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக, இந்த லேப்டாப் ரூ.30,000 முதல் ரூ.50,000 விலை வரம்பில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், நிறுவனம் இந்தியாவில் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது ரூ.14,999 ஆரம்ப விலையில் பிளிப்கார்ட் மற்றும் realme.com மூலம் ஆன்லைனில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

தவிர, ரியல்மீ X7 மேக்ஸ் மற்றும் ரியல்மீ C20A போன்ற ஸ்மார்ட்போன்களையும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Views: - 235

0

0