ரியல்மீ GT 5ஜி அதிகாரப்பூர்வ அறிமுகம் | ஸ்னாப்டிராகன் 888 உடன் கிடைக்கும் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் இதுவா?

16 June 2021, 8:42 am
Realme GT 5G With Snapdragon 888 Officially Launched
Quick Share

ரியல்மீ புதிய முதன்மை ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC சிப்செட் உடன் இயக்கப்படும் ரியல்மீ GT 5ஜி ஸ்மார்ட்போன் தான் அது. இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலும் ரியல்மீ X7 மேக்ஸ் 5 ஜி போனில் இருப்பது போன்ற அம்சங்களையே கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் பல வண்ணங்களிலும் கிடைக்கிறது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5 ஜி SoC உடன் மற்ற தொலைபேசிகளுடன் ஒப்பிடும்போது சந்தையில் இலகுவான ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். கூடுதலாக, தொலைபேசி 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

ரியல்மீ GT 5G விவரக்குறிப்புகள்

ரியல்மீ X7 மேக்ஸ் 5ஜி போலவே 6.4 இன்ச் டிஸ்ப்ளேவும், 120 Hz புதுப்பிப்பு வீதமும், 360 Hz touch sampling rate கொண்ட FHD+ தெளிவுத்திறன் கொண்டது. டிஸ்ப்ளே 2.5d வளைந்த டெம்பர்டு கிளாஸ் உடன் பாதுகாக்கப்படுகிறது, மேலும் இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. 

இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC உடன் குறைந்தது 8 RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது, அதே நேரத்தில் ஹை-எண்ட் மாடல் 12 ஜிபி RAM மற்றும் மைக்ரோ SD கார்டு ஸ்லாட் இல்லாத 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொண்டுள்ளது. தொலைபேசியில் 5ஜி SA / NSA நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் இரட்டை 5ஜி நானோ சிம் ஸ்லாட்டுகள் உள்ளன.

ரியல்மீ GT 5ஜி 64 MP முதன்மை சென்சார், 8 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 MP ஆழம் சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஸ்மார்ட்போனில் 16 MP செல்பி கேமரா உள்ளது, இது FHD வீடியோ பதிவுக்கு உதவியாக இருக்கும், பிரதான கேமரா 4K வீடியோக்களை 60 fps வேகத்தில் படம்பிடிக்க முடியும்.

இந்த சாதனம் 4500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் உள்ளது, மேலும் வேகமான சார்ஜர் சில்லறை தொகுப்பில் சேர்த்து வழங்கப்படும். ரியல்மீ X7 மேக்ஸ் 5ஜி போலவே, ரியல்மீ GT 5ஜி வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் IP மதிப்பீட்டையும் தவறவிடுகிறது, இது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.

ரியல்மீ GT 5 ஜி சர்வதேச விலை

அலிஎக்ஸ்பிரஸ் தளத்தில் ரியல்மீ GT 5ஜி போனின் அடிப்படை மாடலின் விலை 369 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,798 ஆகவும், உயர்நிலை மாடலின் விலை 549 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.48777 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலையைப் பொறுத்தவரை, ரியல்மீ GT 5ஜி போன் தான் நிச்சயமாக மலிவு விலையிலான ஸ்னாப்டிராகன் 888 SoC சிப்செட் உடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.  அதே சமயம் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது சற்று குறைவான விலையிலேயே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 206

0

0