செம ஸ்டைலான டிசைனில் அசத்தல் அம்சங்களுடன் Realme Narzo 30 அறிமுகம் | விலை & விவரங்கள்

24 June 2021, 7:47 pm
Realme Narzo 30 Launched In India;
Quick Share

Realme இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி என்று அழைக்கப்படுகிறது. 

பெயர் குறிப்பிடுவதுபோல், நார்சோ 30 ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும், நார்சோ 30 5ஜி போன் 5ஜி வசதியை ஆதரிக்கும். கேமரா வடிவமைப்பில் சிறிய மாற்றத்துடன் இரு சாதனங்களும் ஒரே மாதிரியாக தான் தெரிகின்றன. இந்தியாவின் சமீபத்திய Realme ஸ்மார்ட்போன்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இங்கே.

Realme Narzo 30 விவரக்குறிப்புகள்

ரியல்மீ நர்சோ 30 போனில் 6.5 அங்குல IPS LCD டிஸ்பிளே உள்ளது, இது FHD+ தெளிவுத்திறனுடன் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் உள்ளது. இது 90 Hz பேனலாகும், இது 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், 580 நைட்ஸ் உச்ச பிரகாச அளவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G95 SoC ஆல் 4/6 ஜிபி RAM மற்றும் 64/128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வகைகளில் இயக்கப்படுகிறது.

சாதனம் Android 11 OS இல் தனிப்பயன் Realme UI 2.0 மென்பொருள் ஸ்கின் உடன் இயங்குகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 48MP முதன்மை சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP B/W சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 16 MP செல்பி கேமரா உள்ளது.

ரியல்மீ நர்சோ 30 ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி உடன் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக்  கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனில் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தொலைபேசியில் மூன்று ஸ்லாட் உள்ளது, இது இரண்டு நானோ சிம்களையும் மைக்ரோ SD கார்டையும் ஒரே நேரத்தில் ஏற்கும்.

ரியல்மீ நர்சோ 30 ஸ்மார்ட்போன் ஜூன் 29 முதல் ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் வண்ணத்தில், 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் ரூ.12,499 விலையிலும், 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹை-எண்ட் மாடல் ரூ.14,499 விலையிலும் கிடைக்கும்.

Views: - 151

0

0