ஆண்டு இறுதிக்குள் 2,500 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க சீன மொபைல் நிறுவனம் திட்டம்!
22 August 2020, 7:55 pmஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ரியல்மீ இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மேலும் 2,500 பேரை வேலைக்கு அமர்த்துவதோடு, அதன் பணியாளர்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதனோடு 5,000 க்கும் மேற்பட்ட விற்பனை ஊக்குவிப்பாளர்களைப் பணியில் அமர்த்தி, நாட்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும் ரியல்மீ இந்தியா திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ் ஷெத் தெரிவித்தார்.
பண்டிகை காலங்களில் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்புகளுடன் விரைவில் 55 அங்குல ஸ்மார்ட் டிவியையும் பிரீமியம் வரம்பில் அறிமுகப்படுத்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.
செப்டம்பர் மாதம் பெர்லினில் நடக்கவிருக்கும் உலகளாவிய நுகர்வோர் மின்னணு நிகழ்ச்சியான IFA 2020 இன் போது சில முக்கிய அறிவிப்புகளுக்கும் நிறுவனம் தயாராக உள்ளது.
“ஸ்டைலான ஸ்மார்ட்வாட்ச்கள், உயர்நிலை தொலைக்காட்சிகள் மற்றும் சிறந்த ஹெட்ஃபோன்கள் மற்றும் கார் சார்ஜர்கள், பேக் பேக்குகள் முதல் ஸ்டைலான லக்கேஜ் கவசங்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் கேஜெட்டுகள் வரையிலான பல்வேறு உபகரணங்கள் ஆகியவற்றுடன் எங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் பிரிவில் மிக விரைவில் சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவோம்.” என்று ஷெத் மேலும் கூறினார்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் கடந்த செவ்வாயன்று தனது பட்ஜெட் விலையிலான C-தொடரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சேர்த்துள்ளது.
ரியல்மீ C12 மற்றும் ரியல்மீ C15 ரூ.8,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரு பெரிய 6,000 mAh பேட்டரி இருக்கும், வாட்டர்-டிராப் நாட்ச் மற்றும் பிரத்யேக மைக்ரோ SD கார்டு ஸ்லாட் உள்ளன. கூடுதலாக, இரண்டுமே மீடியாடெக்கின் ஹீலியோ G35 சிப்செட்டால் இயக்கப்படுகின்றன.
இப்போது, கூடுதலாக ரியல்மீ நார்சோ 20 தொடர் குறித்த தகவல்கலும் வெளியாகத் தொடங்கியுள்ளன. விரைவில், வரும் வாரங்களில் அது குறித்து பல புதுப்பிப்புகளை எதிர்பார்க்கலாம்.