அசத்தலான 390mAh பேட்டரி உடன் ரியல்மீ வாட்ச் 2 சீரிஸ் அறிமுகம் | முழு விவரங்கள் இங்கே

Author: Dhivagar
26 July 2021, 8:54 am
Realme Watch 2 series launched
Quick Share

ரியல்மீ தனது புதிய ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரியல்மீ வாட்ச் 2 சீரிஸ், பட்ஸ் வயர்லெஸ் 2 சீரிஸ் மற்றும் பட்ஸ் Q2 நியோ TWS இயர்போன்ஸ் ஆகியவை அடங்கும். ரியல்மீ சாதனங்கள் ஜூலை 26 முதல் விற்பனைக்கு வரும், மேலும் realme.com, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இந்த பதிவில் ரியல்மீ வாட்ச் 2, வாட்ச் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.

ரியல்மீ வாட்ச் 2, வாட்ச் 2 ப்ரோ: விலை மற்றும் விற்பனை விவரங்கள்

ரியல்மீ வாட்ச் 2 ப்ரோ விலை ரூ.4,999 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இது ஜூலை 26 முதல் விற்பனைக்கு வரும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் கடைகளைத் தவிர, realme.com மற்றும் அமேசான் வழியாகவவும் ஸ்மார்ட்வாட்ச் வாங்க கிடைக்கும். 

மறுபுறம், ரியல்மீ வாட்ச் 2 மாடலின் விலை 3,499 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதுவும் ஜூலை 26 அன்று realme.com, பிளிப்கார்ட் மற்றும் உள்ளூர் கடைகளில் விற்பனைக்கு வரும். ரியல்மீ வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆரம்பகால விற்பனை சலுகையாக ரூ.2,999 விலைக்கு பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கும்.

Realme Watch 2, Watch 2 Pro: அம்சங்கள்

ரியல்மீ வாட்ச் 2 ப்ரோ 1.75 இன்ச் கலர் டச் ஸ்கிரீனை 600 நைட்டுகளின் உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது. 

ஸ்மார்ட்வாட்ச் 30 Hz refresh rate க்கான ஆதரவுடன் வருகிறது. ரியல்மீ வாட்ச் 2 ப்ரோ நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக IP68-மதிப்பீட்டை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 390 mAh பேட்டரியுடன் வருகிறது, இது 14 நாட்கள் வரை நீடித்து இயங்கும் என்று கூறப்படுகிறது.

ரியல்மீ வாட்ச் 2 ப்ரோ ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், இரத்த-ஆக்ஸிஜன்-நிலை மானிட்டர், கலோரி மற்றும் ஸ்டெப் கவுண்டர் மற்றும் ஸ்லீப் டிராக்கருடன் வருகிறது. ரியல்மீ வாட்ச் 2 ப்ரோ இரட்டை-செயற்கைக்கோள் GPS டிராக்கிங்கையும் கொண்டுள்ளது மற்றும் வெளிப்புற ஓட்டம், நடைபயிற்சி, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து மற்றும் ஜம்ப் கயிறு உள்ளிட்ட 90 வெவ்வேறு விளையாட்டு முறைகளை வழங்குகிறது.

மறுபுறம், ரியல்மீ வாட்ச் 2 1.4-இன்ச் (320 × 320 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் 600 nits வரை உச்ச பிரகாசத்துடன் வருகிறது. டிஸ்பிளேவின் மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பைக் கொண்டுள்ளது. சாதனம் SpO2 மானிட்டர், இதய துடிப்பு மானிட்டர் மற்றும் ஸ்லீப் டிராக்கருடன் வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் 315 mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த சாதனம் கொரிய வடிவமைப்பாளர் கிராஃப்ளெக்ஸ் (Grafflex) ஆல் வடிவமைக்கப்பட்டவை உட்பட 100 வாட்ச் பேஸ் உடன் வருகிறது. ரியல்மீ வாட்ச் 2 IP 68 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் 90 விளையாட்டு முறைகளுடன் வருகிறது.

Views: - 201

0

0