எதிர்பாராத நேரத்தில் எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸ்! Realme X7 Max 5G போனின் விலை திடீர் குறைப்பு!

Author: Dhivagar
10 September 2021, 1:09 pm
Realme X7 Max 5G Gets Rs. 6,000 Limited Period Discount At Flipkart
Quick Share

ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தொடர்ந்து விலைகளை உயர்த்தி வரும் நிலையில், ரியல்மீ இப்போது தனது ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்களும் தள்ளுபடிகால சலுகையாக சில ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வணிக தலமான ஃப்ளிப்கார்ட் இப்போது புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையின்படி, ரியல்மீ X7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் பிளிப்கார்ட்டில் ரூ.6,000 தள்ளுபடி உடன் பெற முடியும்.

ரியல்மீ X7 மேக்ஸ் 5G: சலுகை விவரங்கள்

ஃபிளிப்கார்ட் நிறுவனம் ரியல்மீ X7 மேக்ஸ் 5ஜி போனுக்கு ஒரு குறிப்பிட்ட கால சலுகையை அறிவித்துள்ளது, இதையடுத்து ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.6,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்குவோர்கள் இந்த சலுகையைப் பெறலாம். சலுகை சமயத்தில், 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மீ X7 மேக்ஸ் 5ஜி மாடல் ரூ.20,999 விலைக்கு வாங்க கிடைக்கும்.

இந்த மாடல் இந்தியாவில் ரூ.26,999 விலைக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ரியல்மீ X7 மேக்ஸ் 5ஜி யின் 12 ஜிபி RAM+ 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இப்போது இப்போது ரூ. 29,999 வெளியீட்டு விலைக்கு பதிலாக ரூ.26,999 விலைக்கு வாங்க கிடைக்கும். இது மட்டும் இல்லாமல் எக்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.

இன்று தொடங்கும் வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடி, செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13 வரை மட்டுமே கிடைக்கும்.

இந்த விலையில் Realme X7 Max 5G வாங்கலாமா?

Realme X7 Max 5G இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரபலமான 5G ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது மீடியாடெக் டைமென்சிட்டி 1200 செயலி போன்ற சக்திவாய்ந்த சிப்செட்களுடன் இயங்குகிறது, அதை நீங்கள் போகோ F3 GT, ஒன்பிளஸ் நோர்டு 2 போன்றவற்றிலும் காண முடியும். 

1080p FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட 6.43 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளே, 64MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் குறைந்த விலையிலான 5G ஸ்மார்ட்போன் பிரிவில் திறமையான ஸ்மார்ட்போனாகவும் இது கிடைக்கும். 

நல்ல செயல்திறனுடன் கூடிய பிரீமியம் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு மிகவும் நல்ல தேர்வாக இருக்கும்.

Views: - 272

0

0