பிப்ரவரி 4 அன்று அறிமுகமாகிறது ரியல்மீ X7, ரியல்மீ X7 ப்ரோ!

26 January 2021, 1:48 pm
Realme X7, Realme X7 Pro tipped to launch in India
Quick Share

ரியல்மீ X7 சீரிஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தத் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் ரியல்மீ X7 மற்றும் ரியல்மீ X7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கும்.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ரியல்மீ X7 மற்றும் ரியல்மீ X7 புரோ ஆகியவை பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இருப்பினும், இந்தியாவில் X7 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை ரியல்மீ இன்னும் வெளியிடவில்லை. ரியல்மீ X7 மற்றும் X7 ப்ரோ ஆகியவற்றின் முன்னோட்டங்கள் பிளிப்கார்ட்டில் காண்பிக்கப்பட்டுள்ளன, இது இ-காமர்ஸ் இணையதளத்தில் அவற்றின் கிடைப்பை உறுதிப்படுத்துகிறது.

ரியல்மீ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் வரவிருக்கும் ரியல்மீ X7 ஸ்மார்ட்போனின் படத்தை ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டின் படி, சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மீ V15, இந்தியாவில் ரியல்மீ X7 ஆக அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது.

ரியல்மீ X7, X7 ப்ரோ போன்களின் ஸ்டோரேஜ் மற்றும் வண்ண விருப்பங்களும் ட்விட்டரில் கசிந்துள்ளன. அதன்படி, ரியல்மீ X7 6/8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் வரும். இது நெபுலா மற்றும் ஸ்பேஸ் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும்.

ரியல்மீ X7 ப்ரோ 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் என்று கூறப்படுகிறது. மிஸ்டிக் பிளாக் மற்றும் பேண்டஸி வண்ணங்களில் இது கிடைக்கும் .

Views: - 7

0

0