RealmeX9 | ரியல்மீ X9 ப்ரோ, ரியல்மீ ரேஸ் ப்ரோ: முக்கிய விவரக்குறிப்புகள் வெளியானது

23 January 2021, 3:39 pm
Realme X9 Pro, Realme Race Pro Detailed Specifications tipped
Quick Share

ரியல்மீ ரேஸ் மற்றும் ரியல்மீ X9 இன் புரோ பதிப்புகளில் ரியல்மீ வேலை செய்வதாக கூறப்படுகிறது. இப்போது, இரு சாதனங்களுடைய விரிவான விவரக்குறிப்புகளை வைத்துப் பார்க்கையில் ரியல்மீ ரேஸ் புரோ மாடல் ரியல்மீ X9 ப்ரோவை விட உயர்தர சாதனமாகத் தோன்றுகிறது.

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த சாதனங்கள் வெளியாகும் என்று இந்த அறிக்கைகள் மேற்கோள் காட்டுகின்றன. ரியல்மீ ரேஸ் புரோ ஸ்னாப்டிராகன் 888 உடனும், X9 ப்ரோ மீடியா டெக் டைமன்சிட்டி 1200 ஐயும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரியல்மீ X9 ப்ரோ விவரக்குறிப்புகள்

ரியல்மீ X9 ப்ரோ 1080 x 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்ட 6.4 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே கொண்டிருப்பதாகவும், ரியல்மீ UI 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. இதன் டிஸ்பிளே 20:9 என்ற திரை விகிதத்துடன் 120 Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும்.

மீடியா டெக் சமீபத்தில் அறிமுகப்படுத்திய மீடியா டெக் டைமன்சிட்டி 1200 செயலி உடன் இது இயக்கப்பட வேண்டும், இது ஒரு முதன்மை சாதனமாக மாறும். இது 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அல்லது 256 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்படும். இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 mAh பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் இரண்டு இரண்டாம் நிலை 13 மெகாபிக்சல் சென்சார்கள் அடங்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும்.

ரியல்மீ ரேஸ் ப்ரோ விவரக்குறிப்புகள்

மிகவும் சக்திவாய்ந்த கைபேசியில் 6.8 அங்குல QHD டிஸ்ப்ளே 1440 x 3200 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 20:9 திரை விகிதம் மற்றும் 160 Hz புதுப்பிப்பு வீதம் இருக்கும். தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 888 செயலி மற்றும் 12 gb ரேம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ரேம் 128 ஜிபி, 256 ஜிபி அல்லது 512 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படக்கூடும்.

மென்பொருள் பிரிவில், ரியல்மீ UI 2.0 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும், மேலும் 125 W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படும். பின்புறத்தில் உள்ள மூன்று கேமரா அமைப்பு 64 மெகாபிக்சல் பிரதான கேமராவையும், இரண்டு கூடுதல் 13 மெகாபிக்சல் சென்சார்களையும் கொண்டிருக்கும்.

சாதனங்களின் விலை அல்லது உலகளாவிய கிடைக்கும் நிலவரம் குறித்து இப்போதுவரை எந்த தகவலும் இல்லை.

Views: - 0

0

0